News March 4, 2025
வைகுண்டர் வழி நடந்து மனிதம் காப்போம்: CM ஸ்டாலின்

அய்யா வைகுண்டரின் 193வது அவதார தினத்தையொட்டி, CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆதிக்க நெறிகளுக்கும், சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக போராடியவர் என்றும், ‘எளியாரைக் கண்டு இரங்கியிரு மகனே, வலியாரைக் கண்டு மகிழாதே மகனே’ என அவர் போதித்துச்சென்ற வழி நடந்து மனிதம் காப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதையொட்டி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2025
வெயிலிலும் ஜில்லுனு இருக்க நச்சுனு 5 டிப்ஸ்!

இது மார்ச் மாதமா அல்ல மே மாதமா என்றே புரியாத அளவிற்கு இப்போதே வெயில் வாட்டுகிறது. இந்த வெயிலை சமாளிக்க: தண்ணீர் மட்டுமே அருந்தாமல், இளநீர், தர்பூசணி, நுங்கு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் *இறுக்கமான உடைகளை தவிர்த்து, தளர்வான உடைகள், அணியுங்கள் *தொடர்ந்து வெயிலில் நிற்காமல், நிழலான இடத்தில் நில்லுங்கள் *சம்மரில் ஹெவி உடற்பயிற்சி வேண்டாம் *உச்சிவெயிலில் சூடான மசாலா உணவுகளை தவிருங்கள்.
News March 4, 2025
புதிய சாதனைக்கு ரெடியாகும் விராட் கோலி!

ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, ஏராளமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். தற்போது மேலும் ஒரு சாதனை படைக்க அவர் காத்திருக்கிறார். இன்றைய போட்டியில் 40 ரன்கள் எடுத்தால் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற சாதனை கோலி வசமாகும். இதுவரை 16 போட்டிகளில் 662 ரன்கள் குவித்துள்ளார் விராட். பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தவான் 10 போட்டிகளில் 701 ரன்கள் குவித்திருக்கிறார்.
News March 4, 2025
முதல் விக்கெட் எடுத்த ஷமி!

ஷமி இந்திய அணிக்கு முதல் விக்கெட்டை எடுத்துக் கொடுத்துள்ளார். ஆஸி. ஓப்பனர் கூப்பர் கோனொல்லியின்(0) விக்கெட்டை அவர் வீழ்த்தியுள்ளார். ஆஸி. அணி 3 ஓவர்களில் 4-1 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஹெட் 1 ரன்னுடன் இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் வந்துள்ளார்.