News April 16, 2024
மாநிலங்களவை சீட் கேட்போம்

இந்த முறை தேமுதிகவுக்கு உறுதியாக ஒரு மாநிலங்களவை சீட் கேட்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சீட் கேட்பது எங்களது உரிமை. அதைத் தர வேண்டியது கூட்டணிக் கட்சியின் தர்மம் எனப் பேசிய அவர், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன், அங்கு வாடகைக்கு வீடு பார்க்கத் தொடங்கிவிட்டதாகவும், இந்த முறை அவருக்கே வாய்ப்பு தருவோம் என மக்கள் உறுதியாக கூறியுள்ளதாகவும் பிரேமலதா கூறியுள்ளார்.
Similar News
News April 29, 2025
அடைமொழிகளில் நம்பிக்கை இல்லை: அஜித்

பத்ம விருதுக்கு ஜனாதிபதி முர்மு, PM மோடி மற்றும் ரசிகர்களுக்கு அஜித் நன்றி தெரிவித்தார். மேலும், எனக்கு அடைமொழிகளில் எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை. நான் என்னை அஜித் அல்லது ஏகே என குறிப்பிட விரும்புகிறேன் எனக் கூறிய அவர், நடிப்பு, கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என பல்வேறு விஷயங்களை நான் செய்வதற்கு என் நண்பர்கள் தான் காரணம் எனவும் தெரிவித்தார்.
News April 29, 2025
பாதுகாப்பு படைக்கு முழுச் சுதந்திரம்: PM மோடி அறிவிப்பு

தேவையான பதிலடி, அதற்கான தகுந்த நேரம் உள்ளிட்டவைகளுக்கு ராணுவத்திற்கு முழுச் சுதந்திரம் உள்ளதாக PM மோடி கூறியுள்ளார். மோடியின் இல்லத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர், முப்படை தலைமை தளபதி, தலைமை ஆலோசகர் ஆகியோருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதனைக் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும், இந்தியர்களின் ரத்தம் கொதிப்படைந்துள்ளதாகவும் PM தெரிவித்திருந்தார்.
News April 29, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி & கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD அறிவித்துள்ளது. மேலும், வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.