News December 24, 2024
சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்: விஜய்

பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, அவரது படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தினார். சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட சுயமரியாதைச் சுடர், தங்கள் கொள்கைத் தலைவர் என நினைவஞ்சலி தெரிவித்துள்ளார். அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, பெரியார் வழிகாட்டிய சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News September 10, 2025
செங்கோட்டையனுடன் கைகோர்த்த OPS தரப்பு

EPS-க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள செங்கோட்டையன், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். இந்த சூழலில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள இல்லத்தில் செங்கோட்டையனை ஓபிஎஸ் தரப்பினர் சந்தித்து பேசி வருகின்றனர். இது அரசியலில் புதிய திருப்பமாக அமைந்துள்ளது. இதனையடுத்து, டிடிவி, ஓபிஎஸ், சசிகலா, செங்கோட்டையன் இணைந்து செயல்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News September 10, 2025
சொந்தமா இடம் வாங்குவதற்கு முன் இது முக்கியம்

சொந்தமாக வீட்டு மனை வாங்குவது என்பது பலரின் கனவு. அப்படிப்பட்ட கனவை நனவாக்கும்போது, சில விஷயங்களில் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மனை வாங்குவதற்கு முன் நீங்க கவனம் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னவென்பதை தொகுத்து வழங்கியுள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை Swipe செய்து தகவல்களை பாருங்கள். SHARE IT.
News September 10, 2025
Like பண்ணுங்க, Share பண்ணுங்க, Comment செய்யுங்க!

சில செய்திகள் உங்களை புன்னகைக்க வைக்கும். சில செய்திகள் கோபப்படுத்தும். வேறு சில செய்திகள், மற்றவர்களுக்கு ஷேர் பண்ண தூண்டும். இப்படி மனதில் தோணும் போது, உடனே அதை வெளிப்படுத்துங்கள். ஆம், உங்களுக்காகவே செய்திகளுக்கு கீழே லைக், டிஸ்லைக், ஷேர், கமென்ட் ஆப்ஷன்களை கொடுத்திருக்கிறோம். இவற்றை பயன்படுத்திப் பாருங்கள். அதுசரி, இந்த செய்திக்கு எத்தனை லைக்ஸ் போடப் போறீங்க?