News April 14, 2025
அம்பேத்கர் பெரும்புகழ் போற்றுவோம்: சீமான்

சாதிய இழிவைத் துடைத்தெறிய போராடாமல் இருப்பதைவிட செத்தொழிவதே மேலானது என போதித்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் பெரும் புகழ் போற்றுவோம் என சீமான் பதிவிட்டுள்ளார். அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி தனது X பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 7, 2025
பள்ளிகள் 9 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அரசுப் பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் நடத்தப்படும் நிலையில், 3-ம் பருவ தேர்வுகள் டிச.16-ல் தொடங்கி டிச.23 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, டிச.24 முதல் ஜன.1 வரை பள்ளிகள் விடுமுறை என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டிச.24 முதல் ஜன.4 வரை அரையாண்டு தேர்வு விடுமுறையாகும்.
News December 7, 2025
வானில் இருந்து விழுந்த மர்ம சிவப்பு தூண்கள்.. PHOTOS!

வானில் இருந்து ரெட் கலர் தூண்கள் விழுவதை போல நிகழ்ந்த சம்பவத்தின் போட்டோதான் ட்ரெண்டிங். ஏதோ ஏலியன் ஸ்பேஸ்ஷிப்போ என கற்பனையை உலாவ விட வேண்டாம். இது ஒருவகை மின்னல். Sprites எனப்படும் இவை இடி மின்னலுடன் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 50-90 கிமீ உயரத்தில் தோன்றும். இத்தாலியில் நடந்த இந்த அதிசய வானிலை நிகழ்வின் போட்டோவை நீங்க மட்டும் பார்த்து ரசிக்காமல், நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News December 7, 2025
ராமதாஸ் தரப்பால் வெல்லவே முடியாது: அன்புமணி தரப்பு

அன்புமணியை தலைவராக டெல்லி நீதிமன்றம் ஏற்கவில்லை என ராமதாஸ் தரப்பு சொல்வது வேடிக்கையாக இருப்பதாக அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு விமர்சித்துள்ளார். பாமக விவகாரத்தில் எந்த நீதிமன்றத்திற்கு சென்றாலும் ராமதாஸ் தரப்பால் வெல்லவே முடியாது. 2026 வரை அன்புமணிக்கு தலைவர் பதவிக்காலம் இருப்பதை ECI அங்கீகரித்துள்ளது. இதை டெல்லி ஐகோர்ட் நிராகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.


