News April 14, 2025
சமூகநீதியை நிலைநாட்ட உறுதியேற்போம்: இபிஎஸ்

அம்பேத்கர் புகழை போற்றி வணங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார். அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி சேலம் தொங்கும் பூங்கா அருகே உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அம்பேத்கர் வகுத்து தந்த அரசியல் சாசனத்தின்படி சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி கொண்ட சமூகத்தை அமைக்க உறுதியேற்போம் என இபிஎஸ் வலியுறுத்தினார்.
Similar News
News December 29, 2025
புது நாடு உதயம்.. முதல் நாடாக அங்கீகரித்த இஸ்ரேல்!

சோமாலியாவில் இருந்து பிரிந்து தன்னாட்சியுடன் செயல்பட்டு வரும் சோமாலிலாந்தை தனிநாடாக இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. மேலும் சுகாதாரம், டெக்னாலஜி என பல துறைகளில் இணைந்து செயல்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதை சோமாலியா, ஆப்பிரிக்க, ஐரோப்பிய யூனியன்கள், அரேபிய நாடுகள் கடுமையாக எதிர்த்துள்ளன. 1991-ல் நடந்த உள்நாட்டு போரால் பிரிந்த சோமாலிலாந்தை தனது நாட்டின் ஒரு அங்கமாக சோமாலியா கருதி வருகிறது.
News December 29, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (டிச.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News December 29, 2025
அசாத்தியமான படைப்பாக வந்திருக்கும் ‘சிறை’: மாரி

‘சிறை’ படம் பார்த்து மனம் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். எந்த மாதிரியான கதைகளை, எந்த மாதிரியான மனிதர்களை, எந்த மாதிரியான அரசியலை, எந்த மாதிரியான பிரியத்தை சினிமாவாக மாற்றவேண்டும் என்று உணர்ந்த படைப்பாளிகளின் வருகை அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையும் துணிச்சலையும் கொடுக்கும். அப்படியொரு அசாத்தியமான படைப்பாக சிறை வந்திருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.


