News October 5, 2025
எரியவேண்டியவர்களுக்கு எரியட்டும்: ஸ்டாலின்

எரியவேண்டியவர்களுக்கு எரியட்டும் என்பதற்காகவே திராவிட மாடல் என சொல்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டில் பங்கேற்ற அவர், பிற்போக்குத்தனத்தை புகுத்த நினைப்பதை தடுக்கும் அரண்தான் திராவிட மாடல் என பேசியுள்ளார். மேலும், திமுகவை பிடிக்காது என சிலர் கூறினால், இடஒதுக்கீடு, சமத்துவம், சமூகநீதி பிடிக்காது என்பதுதான் அதன் அர்த்தம் என கூறினார்.
Similar News
News October 5, 2025
டிடிவி ஒரு சுயநலவாதி: ஆர்.பி.உதயகுமார்

சுயநலத்தின் மொத்த உருவமாக கருத்து கந்தசாமி தினகரன் பேசியிருப்பதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். அதிமுகவின் உண்மை தொண்டர்கள், விசுவாசிகள், மக்கள் தினகரனின் உண்மை முகத்தை புரிந்து கொண்டனர். பொதுநலம் மறந்து சுயநலவாதியாக செயல்படுபவர் அரசியல் பாதையை வகுக்க முடியாது எனக் கூறிய அவர், தன்னை நம்பியவர்கள் அனைவரையும் திமுகவிற்கு வழியனுப்பி வைத்தவர்தான் டிடிவி என்றும் சாடியுள்ளார்.
News October 5, 2025
Cinema roundup: ‘கும்கி 2’ போஸ்டர்’ வெளியானது

*அருள்நிதியின் ‘ராம்போ’ படத்தின் டிரெய்லர் வெளியானது.
*கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் இணைந்து நடித்துள்ள ‘ஆரோமலே’ படத்தின் ‘எப்படி வந்தாயோ’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
*பிரபு சாலமனின் ‘கும்கி – 2’ அறிமுக போஸ்டர் வெளியானது.
*ரஷ்மிகா மந்தனாவின் ‘The Girlfriend’ திரைப்படம் வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. *மும்பையில் நடிகை சமந்தா புதிய வீடு வாங்கியுள்ளார்.
News October 5, 2025
ATM-க்கு 4 இலக்க பின் நம்பர் வந்தது எப்படி தெரியுமா?

மேகாலயாவின் ஷில்லாங்கில் பிறந்த ஜான் ஷெப்பர்ட்-பரோன் என்பவரால் 1967-ல் ATM மெஷின் கண்டுபிடிக்கப்பட்டது. முதன்முதலில், பாதுகாப்புக்காக 6 இலக்க PIN-ஐ அவர் பரிந்துரைத்தார். ஆனால், மக்கள் இதனை நியாபகம் வைத்துக்கொள்ள சிரமப்படுவார்கள் என அவர் பணியாற்றிய வங்கி கூறியிருக்கிறது. இதனால் தான் ATM PIN-க்காக 4 இலக்கங்களை பரிந்துரைத்தார். அதனையே தற்போது வரை உலக வங்கிகள் பின்பற்றி வருகிறது. SHARE.