News April 9, 2024
ஸ்டாலின் முதலில் தன் வீட்டில் அதை செய்யட்டும்!

சொந்த மகன் மற்றும் மகளுக்கு இடையே பாரபட்சம் காட்டும் முதல்வர் ஸ்டாலின் முதலில் தனது வீட்டில் சமூக நீதியை நடைமுறைப்படுத்தட்டும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். திருவள்ளூரில் பேசிய அவர், “பெண்ணுரிமை, சமத்துவம், சம உரிமை, இட ஒதுக்கீடு, ஜனநாயகம் என மேடைகளில் வசனம் பேசும் ஸ்டாலின், தனது மகனை மட்டும் அமைச்சராக்கியுள்ளார். அவர் ஏன் தனது மகளை அரசியலுக்கு கொண்டு வரவில்லை” என்றார்.
Similar News
News January 17, 2026
ஹாஸ்பிடலில் துரைமுருகன்.. நலம் விசாரித்த CM ஸ்டாலின்

அமைச்சர் துரைமுருகன் திடீர் உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, உடனடியாக ஹாஸ்பிடல் விரைந்த CM ஸ்டாலின், துரைமுருகனின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். மேலும், உடல்நிலையை தீவிரமாக கண்காணிக்கவும் டாக்டர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும், அவரது உடல்நலம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
News January 17, 2026
ஈரானில் இருந்து திரும்பும் இந்தியர்கள்

உள்நாட்டு எதிர்ப்புகள் மற்றும் அமெரிக்காவுடனான போர் அச்சுறுத்தல் காரணமாக ஈரானில் உள்ள இந்திய குடிமக்கள் அங்கிருந்து திரும்பி வருகின்றனர். பதட்டமான சூழ்நிலை காரணமாக ஈரானில் இருந்து வெளியேறுமாறு இந்திய தூதரகம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது. ஈரானில் 9,000 இந்தியர்கள் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் எனவும், தற்போது ஈரானை விட்டு வெளியேறுவது நல்லது எனவும் இந்திய தூதரகம் பரிந்துரைத்தது.
News January 17, 2026
BREAKING: இந்தியா அபார வெற்றி

U19 WC-யில் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் வைபவ் சூர்யவன்ஷி(72), அபிக்யான் குண்டு(80) அரைசதம் அடித்திருந்தனர். தொடர்ந்து வங்கதேசம் விளையாடிய போது 17.2 -வது ஓவரில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது. இதனால் 29 ஓவர்களில் 165 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியை தழுவியது.


