News August 25, 2024
மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும்!

பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான போலி NCC பயிற்சியாளர் சிவராமன் & அவரது தந்தையின் மரணம் மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரக் குற்றத்தை சிவராமனால் தனியாக செய்திருக்க முடியாது என்றும் பின்னணியில் உள்ளவர்களை தப்ப வைக்க சதி ஏதேனும் நடந்துள்ளதா எனவும் எழும் ஐயங்களைத் தீர்த்து, உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்தும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
Similar News
News January 8, 2026
கைக்குழந்தையுடன் பாக்யராஜ் படங்களை பார்த்தேன்: CM

திரை உலகில் பாக்யராஜ் 50 ஆண்டு நிறைவு செய்ததையொட்டி நடந்த விழாவில் CM ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, கதைக்காக பாக்யராஜா, பாக்யராஜுக்காக கதையா என்று சொல்லும் அளவுக்கு வெற்றிப் படங்களை கொடுத்தவர் என அவர் புகழாரம் சூட்டினார். வெற்றி நாயகனாக அவர் வலம் வந்ததாகவும், கைக்குழந்தையாக உதயநிதியை தூக்கிக்கொண்டு சென்று அவரது படங்களை பார்த்ததாகவும் ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார்.
News January 8, 2026
வரலாற்றில் இன்று

*1642 – வானியலாளர் கலிலியோ கலிலி மறைந்தார்
*1828 – அமெரிக்காவில் ஜனநாயக கட்சி தொடங்கப்பட்டது.
*1942 – இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்ததினம்
*1973 – ரஷ்யாவின் லூனா 21 விண்கலம் விண்ணில் பாய்ந்தது
*1986 – கன்னட நடிகர் யஷ் பிறந்ததினம்
*2003 – துருக்கி விமானம் விழுந்து நொறுங்கியதில் 70 பேர் பலியாகினர்.
News January 8, 2026
பிக்பாஸில் ₹7 லட்சத்துடன் வெளியேறிய சபரி?

பிக்பாஸ் சீசன் 9 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், யார் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார் என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே, ₹7 லட்சம் பணப்பெட்டியுடன் சபரி வீட்டைவிட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தான் டைட்டில் ஜெயிப்பதற்கான வாய்ப்பு குறைவே என கருதி அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி இன்று புரொமோ வெளியாக வாய்ப்புள்ளது. யார் டைட்டில் வெல்வார்கள்? சொல்லுங்க


