News April 7, 2025
300 இருக்கட்டும்… அதுல பாதிக்கூட வரல..!

நடப்பு IPL சீசனின் முதல் போட்டியில் SRH விளையாடியதைப் பார்த்து, அடேங்கப்பா… இவுங்க தான் 300 ரன்கள் அடிக்கப்போற ஃபர்ஸ்ட் டீம் என்றெல்லாம் கம்பு சுத்தினார்கள் ரசிகர்கள். ஆனால், இப்போ நிலைமையே வேறு. ஆம், பட்டா பாக்கியம்… படாட்டி லேகியம் என்ற போக்கில் கடைசி 2 மேட்சில் SRH 150 ரன்களுக்கே தடுமாறி விட்டது. ஃபேன்ஸ் புலம்ப ஆரம்பித்து விட்டனர். SRH மீளுமா.. நீங்க என்ன நினைக்கிறீங்க?
Similar News
News October 16, 2025
SPAM கால் தொல்லையா? இதை உடனே பண்ணுங்க

கடந்த சில ஆண்டுகளில் SPAM கால் வருவது அதிகரித்துள்ளது. கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் தருவதாகக் கூறி மீண்டும் மீண்டும் அழைப்புகள் வருவது பலரையும் எரிச்சலடைய செய்கிறது. இதற்காக TRAI ஏற்கனவே DND என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. 1909 என்ற எண்ணை அழைப்பதன் மூலமோ அல்லது SMS செய்வதன் மூலமோ டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளைத் தடுக்கலாம். DND செயலி மூலம் TRAI-க்கு நேரடியாகப் புகார் செய்யலாம்.
News October 16, 2025
வாட்ஸ் ஆப்பில் வரும் அசத்தலான புது அப்டேட்

உங்களுக்கு பிடித்த CONTACTS-ன் ஸ்டேட்டஸை தவறவிடாமல் பார்க்கும் வகையில் புது அப்டேட் வாட்ஸ் ஆப்பில் வர உள்ளது. இதற்கான சோதனை இப்போது வாட்ஸ் ஆப்பின் பீட்டா வெர்ஷனில் நடைபெற்று வருகிறது. பயனர்கள் தங்களுக்கு பிடித்த CONTACT-ல் ஸ்டேட்டஸ் நோட்டிபிகேஷனை ஆன் செய்தால் போதும். இனி தேடி தேடி ஸ்டேட்டஸை பார்க்கும் கவலை உங்களுக்கு வேண்டாம். சூப்பர் அப்டேட்டா?
News October 16, 2025
‘அரசன்’ புரோமோவுக்கு செம ஹைப் கொடுத்த STR

சிம்புவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் கேங்ஸ்டர் படமான அரசனின் ப்ரோமோ நாளை வெளியாகிறது. இதனிடையே புரோமோவை பார்த்து தியேட்டரில் சிம்பு வியந்துபோயுள்ளார். மேலும் ரசிகர்களை தியேட்டரில் பாருங்க என தனது ரசிகர்களிடம் சிம்பு கேட்டுக்கொண்டுள்ளார். 5 நிமிடம் கொண்ட இந்த புரோமாவுக்கான டிக்கெட் முன்பதிவு இப்போது பல இடங்களில் தொடங்கியுள்ளது.