News January 6, 2025
ஜன.11 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்

ஜன.11ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அவையில், நாளை மன்மோகன் சிங், EVKS இளங்கோவனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும் என்று கூறிய அவர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஜன.8, 9, 10ல் விவாதம் நடக்கும் என்றார். இந்த விவாதத்திற்கு ஜன.11ல் CM பதிலுரை அளிப்பார் என்று கூறினார்.
Similar News
News January 16, 2026
பட வாய்ப்புகள் குறைந்ததா? கடுப்பான ARR

1990-களில் தான் சிறந்த இசையை கொடுத்ததாக பலரும் தன்னிடம் வந்து சொல்வதாக AR.ரஹ்மான் தெரிவித்துள்ளார். அப்படியென்றால், இப்போது நான் சிறப்பான இசையை வழங்கவில்லையா என முட்டாள்தனமான கேள்வி எழுகிறது. பாலிவுட் படமான ‘ராமயானா’, சொந்த இசைக் குழு, மணி ரத்னம் படங்கள் என கமிட்மெண்ட் நிறைய இருப்பதால், குறைவான படங்களுக்கு மட்டும்தான் தற்போது இசையமைக்கிறேன் என்றும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
News January 16, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 582 ▶குறள்: எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். ▶பொருள்: நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்.
News January 16, 2026
₹9.20 கோடியை வேண்டாம் என சொன்ன வீரர்

இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவு விரிசல் காரணமாக, ₹9.20 கோடிக்கு எடுக்கப்பட்ட BAN வீரர் <<18778953>>முஸ்தஃபிசுர் ரஹ்மானை<<>> KKR விடுவித்தது. கிரிக்கெட் அல்லாத காரணங்களுக்காக அவர் விடுவிக்கப்பட்டதால், இதை சட்டரீதியாக எதிர்கொண்டு இழப்பீடு பெறலாம் என உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கம் முன்வந்துள்ளது. ஆனால், முஸ்தபிசுர் அதை வேண்டாம் என மறுத்ததால், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் BCB இறங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


