News October 15, 2025
சோதனையை சாதனையாக்கிய ஜாம்பவான்கள் PHOTOS

உங்களுடைய கடின உழைப்பை யார் நிராகரித்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள். ஏனெனில், உலகில் தொடக்கத்தில் நிராகரிக்கப்பட்ட பலரும், நாளடைவில் தொழில் ஜாம்பவான்களாக உருவெடுத்து இருக்கின்றனர். யார் அவர்கள்? மேலே உள்ள போட்டோஸை SWIPE செய்து பாருங்கள். SHARE IT.
Similar News
News October 15, 2025
அமேசானில் 15% ஊழியர்களை நீக்க முடிவு

அமேசான் நிறுவனம் HR பிரிவில் இருந்து 15% ஊழியர்களை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறு சில துறைகளை சார்ந்த ஊழியர்களை நீக்கவும் அமேசான் ஆலோசிக்கிறதாம். அந்நிறுவனம் AI மற்றும் கிளவுட் தொழில்நுட்பங்களில் ₹8,300 கோடி வரை முதலீடு செய்துள்ள நிலையில் இந்த வேலை நீக்கம் திட்டமிடப்பட்டுள்ளது. AI ஆதிக்கத்தால் சமீபத்தில் IBM நிறுவனத்தில் இருந்து 8,000 HR-கள் நீக்கப்பட்டிருந்தனர்.
News October 15, 2025
இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள்… HAPPY NEWS!

2030-ல் காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்த காமன்வெல்த் விளையாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக குஜராத்தின் அகமதாபாத் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் நவ.26-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடைசியாக 2010-ல் டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றது.
News October 15, 2025
17-ம் தேதி சபரிமலை கோயில் நடை திறப்பு

ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளது. 22-ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். இதனிடையே வரும் 22-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு சபரிமலை சென்று சுவாமியை தரிசிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 22-ம் தேதி ஆன்லைன் முன்பதிவுகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.