News March 29, 2025
பழம்பெரும் பாடகி காலமானார்

அசாமை சேர்ந்த பழம்பெரும் பாடகி ஹீரா தாஸ் (73) காலமானார். பிரபல இசையமைப்பாளர் ஜே.பி.தாஸின் மனைவியான இவர், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது. அசாமிய மொழியில், காலத்தால் அழியாத எண்ணற்ற பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்த அவரது மரணத்துக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News April 1, 2025
பும்ரா தொடர்ந்து விளையாட வேண்டுமா? பாண்ட் அட்வைஸ்

பும்ராவுக்கு அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது என BCCIக்கு முன்னாள் NZ பவுலர் ஷேன் பாண்ட் அறிவுறுத்தியுள்ளார். பும்ராவிற்கு கடந்த 2023ல் ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு அதிக பணிச்சுமை கொடுத்தால் அது சிக்கலில் போய் முடியும் எனவும், T20WC, ODIWC-யில் பும்ரா விளையாட வேண்டும் என்றால், ENGக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு பணிச்சுமை கொடுக்காமல் இருப்பதே நல்லது எனவும் பாண்ட் கூறியுள்ளார்.
News April 1, 2025
இந்தியாவில் கால் பதிக்கும் USA அணுசக்தி நிறுவனம்

USAவின் ஹோல்டெக் இன்டர்நேஷனல் நிறுவனம், இந்தியாவில் அணு உலைகளை வடிவமைப்பதற்கு டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளார். இதன்மூலம், இந்தியாவில் புதிய அணு உலைகள் நிறுவப்பட உள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், டாடா மற்றும் L&T நிறுவனங்களுக்கு 300 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அணு உலை தொழில்நுட்பம் வழங்கப்பட உள்ளன. இதன்மூலம், இந்தியா- அமெரிக்கா இடையே அணுசக்தி துறையில் தொழில்நுட்ப பரிமாற்றம் நடைபெற உள்ளது.
News April 1, 2025
தமிழர்களை பார்த்து கற்க வேண்டும்: ராஜ் தாக்கரே

தென் மாநிலங்கள், குறிப்பாக தமிழர்களை பார்த்து மராட்டியர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என நவ நிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார். ஹிந்தி திணிப்பை தமிழர்கள் வலிமையாக எதிர்ப்பதாகவும், ஆனால், மராட்டியர்கள் தங்கள் மொழி குறித்த கவலையே இல்லாமல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு மாநில மொழியும் மதிக்கப்பட வேண்டியவை எனவும் தெரிவித்துள்ளார்.