News August 25, 2025

மருத்துவமனையில் பழம்பெரும் தலைவர்… தீவிர சிகிச்சை

image

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நேற்று வெங்கடேஸ்வரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், நல்லகண்ணுவுக்கு வயது மூப்பின் காரணமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அவருக்கு மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

Similar News

News August 25, 2025

நெல்லையில் வங்கி வேலை.. நாளை கடைசி

image

SBI வங்கியில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 380 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும் இதில் ரூ.24,050 – 64,480 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்ற 20- 28 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மதுரை, நாகர்கோவில். ராமநாதபுரம், நெல்லை, விருதுநகரில் நடைபெறும் நிலையில்<> இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம்.

News August 25, 2025

அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் நற்செய்தி

image

பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற MHC மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு SC இடைக்காலத் தடை விதித்துள்ளது. MHC உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி SC-ல் மேல்முறையீடு செய்தது. இந்த மனு, நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு 4 வாரத்திற்குள் TN அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News August 25, 2025

திருப்பதியில் நடிகர் ரவி மோகன்… காரணம் தெரியுமா ?

image

இயக்குநர், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் திருப்பதி எழுமலையானை தரிசித்துள்ளார். சென்னையில் நாளை ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை தொடங்கி அவர் தயாரிக்கும் புதிய படங்களின் அறிவிப்பை வெளியிடவுள்ளார். தொடங்கும் தொழில் தழைத்தோங்க ரவி மோகன் ஏழுமலையானை தரிசித்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட அவர் சபரிமலைக்கு மாலை போட்டு ஐயப்பனை தரிசித்திருந்தார்.

error: Content is protected !!