News April 1, 2025
பழம்பெரும் நடிகை காலமானார்

ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகை சியான் பார்பரா ஆலன் (78), உடல்நலக் குறைவால் காலமானார். அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் உயிரிழந்தார். The Waltons தொடர் மூலம் புகழ்பெற்ற இவர் நடித்த படங்களுள் Billy Two Hats, Love American Style, Scream, Pretty Peggy, The Lindbergh Kidnapping Case உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. நடிப்புக்காக கோல்டன் குளோப் விருதுக்கும் இவர் பரிந்துரைக்கப்பட்டார்.
Similar News
News November 24, 2025
SC-ன் 53-வது தலைமை நீதிபதி.. யார் இந்த சூர்யகாந்த்?

ஹரியானாவின் ஹிசாரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த இவர், பஞ்சாப், ஹரியானா ஐகோர்ட்டுகளில் நீதிபதியாகவும், 2018-ல் இமாச்சல் ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாகவும் பணிபுரிந்துள்ளார். 2019 மே மாதம் SC நீதிபதியானார். J&K 370 சட்டப்பிரிவு நீக்கம், பிஹார் SIR, பெகாசஸ் உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை வழங்கிய அமர்வுகளில் சூர்யகாந்த் அங்கம் வகித்திருந்தார்.
News November 24, 2025
இந்து கல்லூரியில் முஸ்லிம் மாணவர்கள்.. பாஜக எதிர்ப்பு

ஜம்மு & காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 42 முஸ்லிம், 8 இந்து மாணவர்கள் சேர்க்கப்பட்டிருப்பது, அரசியல் ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, VHP, பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் துணைநிலை ஆளுநரிடம் மனு அளித்துள்ளன. ஆனால், நீட் தகுதி தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
News November 24, 2025
BREAKING: தங்கம் விலை குறைந்தது

தங்கம் விலை இன்று(நவ.24) சவரனுக்கு ₹880 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,520-க்கும், சவரன் ₹92,160-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) 30 டாலர்கள் குறைந்து 4,053 டாலர்களுக்கு விற்பனையாகிறது. அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.


