News November 23, 2024
அன்றே கணித்த Legent இந்திரா காந்தி..!

தான் கொல்லப்படுவதற்கு 2 நாள்களுக்கு முன், பிரியங்கா பற்றி இந்திரா காந்தி அவரது செயலாளரிடம் சொன்ன வார்த்தைகள் வைரலாகி வருகின்றன. ‘‘நான் நீண்ட காலம் வாழ மாட்டேன் என்பது எனக்கு தெரியும். ஆனால் பிரியங்கா தோற்றத்தில் மக்கள் என்னை பார்ப்பார்கள்’’ என இந்திரா கூறியுள்ளார். மேலும், பிரியங்கா பல சாதனைகள் புரிவார் எனவும், அதனால் மக்கள் தன்னை மறப்பார்கள் எனவும் அவர் முன்பே கணித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
சிவகங்கை: டிகிரி போதும்.. ரூ85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

சிவகங்கை மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் <
News December 4, 2025
உஷாரான செங்கோட்டையன்.. தவெகவில் 3 தலைவர்கள்?

EX MLA சின்னசாமியுடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோதே, இடையில் நுழைந்த செந்தில் பாலாஜி, அவரை தட்டித்தூக்கி திமுகவில் இணைத்ததாக கூறப்படுகிறது. இதுபோல் இனி நடந்துவிடக் கூடாது என உஷாரான செங்கோட்டையன், சென்னை, டெல்டா, கொங்குவை சேர்ந்த 3 முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அவர்கள் விரைவில் தவெகவில் இணையவிருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
News December 4, 2025
தங்கம் விலை இப்படி மாறியிருக்கே!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $22 உயர்ந்து, $4,211.56-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று (டிச.4) மட்டும் சவரனுக்கு ₹160 உயர்ந்து, ₹96,480-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.


