News March 28, 2024

பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்

image

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, மாற்று கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், நேற்று நாகர்கோவிலில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் முன்னிலையில், பாஜக கவுன்சிலர்கள் 3 பேர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

Similar News

News March 11, 2026

சிலிண்டர் சிக்கல்.. அரசு ஹாஸ்பிடல்களில் புதிய ஏற்பாடு

image

நாடு முழுக்க சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் அரசு ஹாஸ்பிடல்களுக்கு முக்கிய ஆலோசனைகளை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வழங்கியுள்ளது. நோயாளிகளுக்கு உணவு வழங்குவது பாதிக்கப்படாமல் இருக்க குறைவான எரிபொருள் தேவைப்படும் உணவுகளை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவல், ரொட்டி, ஓட்ஸ் போன்ற உணவுகள் நோயாளிகளின் ஃபுட் மெனுவில் அதிகம் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

News March 11, 2026

BREAKING: கேஸ் சிலிண்டர்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

image

தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், கேஸ் விநியோகத்தை சீர்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சக்கரபாணி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, கேஸ் சிலிண்டர் விநியோகம், பெட்ரோல் இருப்பு குறித்து குழு அமைக்கப்பட்டு ஆராயப்படும் என அவர் அறிவித்துள்ளார். அதன்பின், தட்டுப்பாடின்றி சிலிண்டர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமாம்.

News March 11, 2026

BREAKING: மார்ச் 28-ல் தொடங்கும் IPL திருவிழா!

image

ரசிகர்கள் பெரிதும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் IPL 2026 தொடருக்கான முதல் கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 28-ம் தேதி இத்தொடரின் முதல் போட்டியில் RCB, SRH அணிகள் பெங்களூருவில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 30-ம் தேதியன்று, கவுகாத்தியில் CSK தனது முதல் போட்டியை RR அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. CSK அட்டவணை: மார்ச் 30- RR, ஏப். 3- PBKS, ஏப். 5- RCB, ஏப். 11- DC.

error: Content is protected !!