News April 24, 2024
விடுப்பு வழங்க மறுக்கக் கூடாது

பணிபுரியும் பெண்களுக்குக் குழந்தைப் பராமரிப்பு விடுப்பு வழங்க மறுப்பது அடிப்படை உரிமையை மீறும் செயல் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இமாச்சலைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியை, தனது குழந்தையைக் கவனிக்க விடுப்பு வழங்க மாநில அரசு மறுப்பதை எதிர்த்து வழக்குத் தொடுத்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட், தாய்மார்களுக்கு விடுப்பு வழங்க மறுப்பது, அவர்களைப் பணியை விட்டே வெளியேற்றுவதற்குச் சமம் எனக் கூறியுள்ளது.
Similar News
News January 13, 2026
School Fees-க்கு காசு இல்லையா? இதோ Scholarship!

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள், 9-12-ம் வகுப்பு வரை படிக்க ஆண்டுதோறும் ₹75,000 முதல் ₹1,25,000 வரை கொடுக்கிறது PM YASASVI Scholarship திட்டம். இதற்கு, மாணவர்கள் OBC, EBC, DNT பிரிவுகளை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருவாய் ₹2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற, https://scholarships.gov.in/ -ல் விண்ணப்பிக்கலாம். SHARE.
News January 13, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு.. சற்றுமுன் புதிய அறிவிப்பு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளையும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுவரை 2 கோடியே 4 லட்சம் குடும்பத்திற்கு ₹3,000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், விடுபட்டவர்கள் நாளை பொங்கல் பரிசை வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், கைரேகை சரியாக பதியாவிட்டாலும், கண் கருவிழி மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
News January 13, 2026
மே 1-ம் தேதி காத்திருக்கும் ட்ரீட்!

அஜித்தின் கார் ரேஸிங் குறித்த ஆவணப்படம் தயாராகி வருவது தெரிந்த விஷயமே. இந்த ஆவணப்படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்களாம். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஹாலிவுட் தரத்திற்கு நிகராக இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளதால், OTT மார்க்கெட்டில் படத்துக்கு கடும் கிராக்கி நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


