News April 13, 2025
உடனே வெளியேறுங்க.. டிரம்ப் நிர்வாகம் புது உத்தரவு

USA-ல் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டினர் உடனே வெளியேற வேண்டுமென டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. X பக்கத்தில் USA உள்துறை வெளியிட்டுள்ள பதிவில், 30 நாள்களுக்கு மேல் USA-ல் தங்கியிருப்போர் அரசிடம் பெயரை பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும் எனக் கூறியுள்ளது. இந்த உத்தரவு, H-1 B விசா, மாணவர் விசா பெற்று USA-ல் தங்கியிருப்போருக்கு பொருந்தாது.
Similar News
News January 21, 2026
உரிமைத் தொகை உயர்வு.. அறிவிக்கிறார் CM ஸ்டாலின்

CM ஸ்டாலின் தலைமையிலான நடப்பு திமுக ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நாளை முதல் வழக்கமான அலுவல்கள், கேள்வி-பதில்களை தொடர்ந்து CM ஸ்டாலின் முக்கிய <<18911897>>அறிவிப்புகளை<<>> வெளியிடவுள்ளார். அதில், CM ஏற்கெனவே கூறியது போல் மகளிர் உரிமைத் தொகை உயர்வு பற்றிய அறிவிப்பு இடம்பெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, மிக விரைவில் மகளிருக்கான இனிப்பான செய்தியை எதிர்பார்க்கலாம்.
News January 21, 2026
தேர்வு கிடையாது.. ₹25,000 சம்பளம்: APPLY HERE

ஆதார் மையங்களில் சூப்பர்வைசர்/ ஆபரேட்டர் பிரிவுகளில் காலியாகவுள்ள 282 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th, 12th, ITI. தேர்வு முறை: சான்றிதழ் சரிபார்ப்பு. சம்பளம்: ₹25,000 முதல் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜன.31. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News January 21, 2026
கோலியை பாலோ பண்ணுங்க: கவாஸ்கர்

இளம்வீரர்கள் கோலியின் ஆட்ட பாணியை பின்பற்றி விளையாட வேண்டும் என Ex கிரிக்கெட்டர் கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய அணி ODI தொடரை இழந்தது. 3-வது போட்டியில் ஒற்றை ஆளாக ரன்கள் குவித்த கோலி குறித்து பேசிய கவாஸ்கர், இன்னிங்ஸை நிதானமாக கட்டமைத்து பின்னர் ரன் குவிப்பில் கவனம் செலுத்தும் அவரின் ஆட்டத்தை இளம் வீரர்கள் பாடமாக எடுத்து கொண்டு பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.


