News March 18, 2025
வாழ்வாதாரத்திற்காக பல மொழிகள் கற்கலாம்: AP CM

வாழ்வாதாரத்திற்காக பல மொழிகளை கற்பது அவசியம் என ஆந்திரா CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை ஆதரித்தும், மும்மொழியின் அவசியத்தை வலியுறுத்தியும் ஆந்திரா சட்டப்பேரவையில் பேசிய அவர், மொழி என்பது வெறுப்பதற்காக அல்ல என்றும், ஹிந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி எனவும் குறிப்பிட்டார். TNஇல் உள்ள முக்கிய கட்சிகள் மும்மொழி கொள்கையை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 18, 2025
அரசியல் நாகரிகம் எதுவரை?

தவெக தலைவர் விஜய், நடிகைகளின் இடுப்பைக் கிள்ளி அரசியல் செய்கிறார் என்று அண்ணாமலை விமர்சனம் செய்தார். இதற்கு பதிலளிக்கும் தவெகவினர், கலா மாஸ்டருடன் அண்ணாமலை நடனம் ஆடிய வீடியோவை வெளியிட்டு கேலி செய்கின்றனர். மேலும் சிலர், உங்கள் கட்சியிலும் குஷ்பு மாதிரியான நடிகைகள் இருக்கிறார்கள்தானே! நீங்கள் இப்படி பேசலாமா என்று கேள்வி எழுப்புகின்றனர். அரசியலில் இது நாகரிகமில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
News March 18, 2025
நாக்பூரில் வெடித்த கலவரம்: காரணம் என்ன?

நாக்பூரில் கலவரம் மூண்டதற்கு ‘சாவா’ திரைப்படமே காரணமாகி இருக்கிறது. சட்டப்பேரவையில் படத்தை குறிப்பிட்டு, அவுரங்கசீப்பை புகழ்ந்து சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஹாஸ்மி கோஷமிட்டதால், விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது புனித நூலை அவர்கள் எரித்ததாக வதந்தி பரவியதால், வன்முறை மூண்டு கலவரமாக வெடித்தது.
News March 18, 2025
OTTயில் வெளியாகிறது டிராகன்

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘டிராகன்’ திரைப்படம், வரும் 21ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தில், ப்ரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம், நெட்ஃபிளிக்ஸில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.