News March 16, 2024
“கூட்டணி குறித்து தலைமை கழகம் அறிவிக்கும்”

கூட்டணி குறித்த முடிவை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என தேமுதிக தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கூட்டணி குறித்து யூகத்தின் அடிப்படையில் பல செய்திகள் வெளியாகிறது. கூட்டணி குறித்து தலைமை கழகம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியானது’ எனத் தெரிவித்துள்ளது.
Similar News
News December 13, 2025
இயக்குநர் செல்வராகவனுக்கு விவாகரத்தா?

பிரபல இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அவரது மனைவி கீதாஞ்சலி தனது இன்ஸ்டாவில் இருந்து செல்வராகவனின் அனைத்து போட்டோவையும் டெலிட் செய்துள்ளதை தொடர்ந்து இச்செய்தி சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருவருக்கும் 2011-ம் ஆண்டு திருமணமானது குறிப்பிடத்தக்கது.
News December 13, 2025
ஐசிசி விருது பெறுகிறாரா கிங் கோலி?

2025-ம் ஆண்டுக்கான சிறந்த ODI வீரருக்கான விருது பட்டியலில் கோலி இடம்பிடித்துள்ளார். 2025-ல் 651 ரன்கள் எடுத்துள்ளதோடு அதிக சதமடித்த (52) வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 2017, 2018, 2023-லும் இவ்விருதை கோலி பெற்றுள்ளார். பட்டியலில் ஜோ ரூட், ஹோப், மேட் ஹென்றி, மிட்செல் சாண்ட்னர் உள்ளிட்டோர் இருக்கின்றனர். 650 ரன்கள் அடித்தும் பட்டியலில் ரோஹித் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
News December 13, 2025
FLASH: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

தங்கம், வெள்ளி விலை இந்த வாரத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த வார வர்த்தக முடிவில், சென்னையில் 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹98,960 ஆக உள்ளது. இது கடந்த வாரத்துடன் (டிச.6-ல் 1 சவரன் ₹96,320) ஒப்பிடுகையில் ₹2,640 அதிகமாகும். தங்கத்திற்கு சற்றும் சளைக்காமல், வெள்ளி விலை இந்த வாரத்தில் மட்டும் ₹11,000 அதிகரித்துள்ளது. தற்போது, 1 கிலோ வெள்ளி ₹2.10 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருகிறது.


