News March 26, 2025
நடிகர் மனோஜ் பாரதிராஜா உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா, உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிகவின் வன்னியரசு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
Similar News
News March 29, 2025
வங்கிகளுக்கு விடுமுறை இல்லை

ரம்ஜான் தினமான மார்ச் 31ஆம் தேதி அனைத்து வங்கிகளும் திறந்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் தேதி கணக்குகள் முடிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு அதே தினத்தில் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், வங்கிகள் விடுமுறையின்றி செயல்பட்டு கணக்குகளை முடிக்க வேண்டும் என்று RBI உத்தரவிட்டுள்ளது.
News March 29, 2025
நீங்க எவ்வளவு நேரம் போன் பாக்குறீங்க?

இப்போதெல்லாம் காலை கண் விழிப்பதே போனின் அலாரம் சத்தம் கேட்டு தான். கையுடன் போனை ஒட்டிவைத்தது போல ஆகிவிட்டது நிலைமை. ஒரு இந்தியர், சராசரியாக ஒரு நாளில் 5 மணி நேரம் வரை போனை பார்த்துக்கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில், 2024 ஆம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக இந்தியர்கள் 1.1 லட்ச கோடி மணி நேரத்தை போனை பார்த்து செலவழித்திருப்பதாக கூறப்படுகிறது. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் போன் பாக்குறீங்க?
News March 29, 2025
இன்னும் ஒரு மணி நேரத்தில் ‘GBU’வின் மாஸ் அப்டேட்!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், உருவாகி வருகிறது அஜித்தின் ‘குட் பேட் அக்லி’. படத்தின் Second Single ப்ரோமோ இன்று மாலை 5:50 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்பவே ரசிகர்கள் இது என்ன மாதிரி பாட்டா இருக்கும் தெரியலையே என ஆர்வத்துடன் உள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளிவர இருக்கிறது.