News June 4, 2024
புதுயுகத்தின் தலைவன் ‘பீம் ஆர்மி’ ஆசாத் வெற்றி

உ.பி.,யின் நகினா தொகுதியில் ஆசாத் சமாஜ் கட்சியின் தலைவர் ‘பீம் ஆர்மி’ சந்திரசேகர் ஆசாத் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 5,12,552 வாக்குகளைப் பெற்ற அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ஓம் குமாரைவிட 1,51,473 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளார். அம்பேத்கர், கன்ஷிராம் ஆகியோரை வழிகாட்டியாக ஏற்ற ஆசாத், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்க களப்பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 11, 2026
வீட்டு கேஸ் சிலிண்டர்.. அரசு கொடுத்த மகிழ்ச்சி செய்தி

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிலிண்டர் தட்டுப்பாடு பற்றி மக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டரை முன்னுரிமை அடிப்படையில் விநியோகித்து வருவதாகவும், முன்பதிவு செய்த இரண்டரை நாளில் விநியோகம் செய்யப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. SHARE
News March 11, 2026
குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல்: நயினார்

வரும் தேர்தலில் திமுக நடத்தும் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என நயினார் கூறியுள்ளார். NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 2026 தேர்தலானது TN Vs DELHI தேர்தல் என CM ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், இது குடும்ப ஆட்சிக்கும் TN மக்களுக்கும் இடையிலான தேர்தல் என்று தெரிவித்தார். மேலும், PM மோடி தமிழகம் வரும் போதெல்லாம் தாய்மாமன் சீர் போல பல கோடி மதிப்புள்ள திட்டங்களை கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
News March 11, 2026
நடிகை த்ரிஷாவின் புதிய POST

குந்தவை காஸ்ட்யூமை நாய் அணிந்திருக்கும் போட்டோவை த்ரிஷா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். வேறொருவரின் பதிவை தனது இன்ஸ்டா ஸ்டோரியாக பகிர்ந்துள்ள அவர், அந்த போட்டோவிற்கு ஹார்ட்டின் எமோஜியை வைத்துள்ளார். தன்னை விமர்சித்த பார்த்திபனுக்கு பதிலடியாக இந்த போட்டோவை த்ரிஷா வெளியிட்டுள்ளார் என்றே நெட்டிசன்கள் SM-ல் பேசத் தொடங்கி விட்டனர்.


