News May 16, 2024
இந்திய அணி பயிற்சியாளராக விரும்பாத லக்ஷ்மன்?

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக தற்போது பதவி வகிக்கும் டிராவிட்டுக்கு பதில் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்ய பிசிசிஐ விளம்பரம் வெளியிட்டுள்ளது. இதனால் அவருக்கு அடுத்து யார் அந்த பதவிக்கு வருவார்கள் என மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவரான விவிஎஸ் லட்சுமண் பெயரும் அடிபட்டது. ஆனால், அதை லக்ஷ்மன் விரும்பவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன.
Similar News
News December 27, 2025
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்!

தங்கம் விலை இன்று(டிச.27) 22 கேரட் 1 கிராம் ₹110 உயர்ந்து ₹13,000-ஐ தொட்டுள்ளது. சவரனுக்கு ₹880 உயர்ந்து ஒரு சவரன் ₹1,04,000-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை <<18681773>>சர்வதேச சந்தையில்<<>> ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் இந்திய சந்தையில் கடந்த 6 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹4,800 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 27, 2025
காலை 11 மணிக்கு கூடுகிறது நாதக பொதுக்குழு!

சீமான் தலைமையில் இன்று நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் நடைபெறவுள்ளது. இதில், கட்சியின் ஆண்டு கணக்கு, 2026 தேர்தல் வேட்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. அதேபோல், கட்சியிலிருந்து அண்மை காலமாக பல முக்கிய முகங்கள் வெளியேறிய நிலையில், அவர்கள் வகித்த பதவிகளுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் சீமான் இக்கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News December 27, 2025
புதிய 500 ரூபாய் நோட்டு.. வந்தது வார்னிங்

ATM மெஷினுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போலி 500 ரூபாய் நோட்டுகளை தயாரித்த மளிகை கடைக்காரர் ராஜேந்திரன் போலீசில் சிக்கியுள்ளார். திருப்பூர், ஆண்டிபாளையத்தில் தனியார் வங்கி ATM-ல் 12 நோட்டுகளை(₹500) ஒருவர் டெபாசிட் செய்துள்ளார். இதை கண்டுபிடித்த மேலாளர் போலீசிடம் புகார் அளிக்க விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ATM மெஷினையே ஏமாற்றும் வகையில் போலி ₹500 நோட்டுகள் இருப்பதால் மக்கள் உஷாராக இருங்க.


