News February 22, 2025
BREAKING: 4 நாட்கள் வக்கீல்கள் ஸ்டிரைக்

தமிழகம் முழுவதும் வரும் 26 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை நீதிமன்ற பணிகளை புறக்கணிக்கப் போவதாக வக்கீல்கள் அறிவித்துள்ளனர். தமிழக, புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டுக்குழு வெளியிட்ட அறிவிப்பில், வழக்கறிஞர் சட்டத் திருத்த வரைவு மசோதா-2025ஐ மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி ஸ்டிரைக்கில் ஈடுபடவும், 26ஆம் தேதி நீதிமன்றங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News February 23, 2025
ஐ.எஸ்.எல் தொடர்: ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பஞ்சாப் அணியை ஈஸ்ட் பெங்கால் அணி வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அந்த அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி பெற்றது. 13 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், இன்றைய வெற்றியின் மூலம் ஈஸ்ட் பெங்கால் அணி புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
News February 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: புறங்கூறாமை
▶குறள் எண்: 187
▶குறள்:
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
▶பொருள்: மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.
News February 23, 2025
CT 2025: பென் டக்கெட் புதிய சாதனை

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் புதிய சாதனை படைத்துள்ளார். ஆஸி., அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 165 ரன்கள் குவித்த அவர், இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் நாதன் ஆஸ்டில் 145*, மூன்றாவது இடத்தில் ஆண்டி ஃப்ளவர் 145, நான்காவது இடத்தில் கங்குலி 141* உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.