News March 25, 2025
யஷ்வந்த் வர்மாக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம்

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத்திற்கு பணியிடமாற்றம் செய்ய அம்மாவட்ட வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீதிபதியை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், அலகாபாத் நீதிமன்றத்தில் பணியாற்ற கூடாது என வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். முன்னதாக, நீதிபதி வீட்டில் இருந்து பலகோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
Similar News
News March 29, 2025
இ(பி)றந்த குழந்தைக்கு வந்தது உயிர்…அதிசயமா? அலட்சியமா?

அரசு சுகாதார மையத்தில் இறந்ததாகக் கூறப்பட்ட பச்சிளம் குழந்தை, தனியார் ஹாஸ்பிடலில் உயிர்பிழைத்த சம்பவம் பிஹாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகதூர் பைதா – ஜோதி குமாரி தம்பதிக்கு பிறந்த குழந்தை அசைவற்று இருந்ததால் அது இறந்துவிட்டதாக அரசு டாக்டர் கூறியுள்ளார். பின்னர், தனியார் ஹாஸ்பிடலில் ஆக்சிஜன் செலுத்தியபோது குழந்தை அழத் தொடங்கி இருக்கிறது. இதனால், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News March 29, 2025
சேப்பாக்கத்தில் சிஎஸ்கே படுதோல்வி…!

சேப்பாக்கத்தில் CSK அணியை வென்று 17 ஆண்டுகால சோக வரலாற்றுக்கு RCB முடிவு கட்டியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த RCB அணியில், கேப்டன் ரஜத் பட்டிதார் அரைசதம் விளாசினார். 20 ஓவர்களில் அந்த அணி 196 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய CSK அணியில், கேப்டன் ருதுராஜ் டக் அவுட் ஆனார். இறுதிவரை போராடியும் CSK அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. 2008-க்கு பிறகு சேப்பாக்கத்தில் ஆர்சிபி வென்றுள்ளது.
News March 29, 2025
ராசி பலன்கள் (29.03.2025)

➤மேஷம் – நட்பு ➤ரிஷபம் – நலம் ➤மிதுனம் – நன்மை ➤கடகம் – லாபம் ➤சிம்மம் – செலவு ➤கன்னி – அன்பு ➤துலாம் – தடங்கல் ➤விருச்சிகம் – மகிழ்ச்சி ➤தனுசு – ஆதாயம் ➤மகரம் – தாமதம் ➤கும்பம் – இன்பம் ➤மீனம் – வரவு.