News April 11, 2025
கோர்ட்டுக்கு பட்டன் போடாமல் வந்த வக்கீல்.. 6 மாதம் சிறை

கோர்ட்டுக்கு வக்கீல் அங்கி அணியாமல், சட்டை பட்டன் போடாமல் வந்தவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து அலகாபாத் ஹைகோர்ட் லக்னோ கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வக்கீல் அசோக் பாண்டே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதன்மீதான விசாரணை முடிந்ததால், 4 வாரங்களுக்குள் சரணடையும்படியும், வக்கீல் தொழிலுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என்பது குறித்தும் விளக்கம் அளிக்க ஆணையிட்டது.
Similar News
News December 19, 2025
பள்ளி மாணவி கர்ப்பம்.. அதிரடி தண்டனை

9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கொடூரனுக்கு, தேனி போக்சோ கோர்ட் 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. 2020 முதல் மாணவியை காதலித்து வந்த இளைஞருக்கு 2022-ல் வேறொரு பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளது. இருப்பினும், பெற்றோரை கொலை செய்துவிடுவேன் என மிரட்டி மாணவியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளான். அதில் மாணவி கர்ப்பமாக, அந்த நிலையிலும் பலாத்காரம் செய்திருக்கிறான் இந்த கொடூரன். இவனை என்ன செய்வது?
News December 19, 2025
BREAKING: யூடியூப் தளம் முடங்கியது

இந்தியா மற்றும் அமெரிக்காவின் பெரும்பாலான இடங்களில் யூடியூப் தளம் முடங்கியுள்ளதால் பயனர்கள் அவதியடைந்துள்ளனர். இதனையொட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக கூகுள் ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் இப்பிரச்னை தீர்க்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உங்களுக்கு யூடியூப் வேலை செய்கிறதா?
News December 19, 2025
வீடு வீடாக சென்று செக் பண்ணுங்க: ப.சிதம்பரம்

இன்று வெளியான வரைவு வாக்காளர் பட்டியலின்படி, சிவகங்கையில் 1.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இறுதி வாக்காளர் பட்டியலை எடுத்துக் கொண்டு, வீடு வீடாகச் சென்று சரிபார்க்க காங்கிரஸ் பூத் கமிட்டி உறுப்பினர்களிடம் கூறியுள்ளதாக தெரிவித்த அவர், தேர்தல் ஆணையத்தைவிட TN அரசியல் கட்சிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


