News July 7, 2024
சட்ட விதிகளை மீற முடியாது: ஐகோர்ட்

ஆம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தற்போது அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்துவிட்டு வேறு இடத்தில் மணி மண்டபம் கட்டிக்கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆம்ஸ்ட்ராங் தரப்பு இதனை ஏற்க மறுத்ததால், வேறு பெரிய சாலை, விசாலமான இடம் இருந்தால் கூறும்படியும், அதன்பிறகு உத்தரவு பிறப்பிப்பதாக கூறி வழக்கை 10.30 வரை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
Similar News
News September 23, 2025
சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த உதவும் ஜுஸ்கள்

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பல்வேறு உணவு கட்டுபாடுகள் உள்ளன. இருப்பினும் சில ஜூஸ் நன்மை அளிக்கின்றன. அதுபோன்று வீட்டில் எளிதாக செய்யக்கூடிய ஜூஸ் என்னவென்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. மேலும், இதுபோன்று உங்களுக்கு தெரிந்த ஜூஸ் பெயரை கமெண்ட்ல சொல்லுங்க.
News September 23, 2025
BREAKING: பிரபல அம்பயர் ‘டிக்கி பேர்ட்’ காலமானார்

கிரிக்கெட் விளையாட்டில் உலகம் முழுவதும் ரசிகர்களால் மறக்க முடியாத நடுவர் இங்கிலாந்தை சேர்ந்த டிக்கி பேர்ட் (92 வயது). வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. லெஜெண்ட அம்பயரான அவரது மறைவுக்கு வீரர்களும் ரசிகர்களும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.
News September 23, 2025
கோழியா, முட்டையா? முதலில் வந்தது எது? இதோ பதில்

முட்டையில் இருந்து கோழி வந்ததா, கோழியில் இருந்து முட்டை வந்ததா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. கோழிக்கு முன்னதாகவே (150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) பல பறவைகள் உயிர்வாழ்ந்துள்ளன. அந்த பறவைகள் ஈன்ற முட்டையில் ஏற்பட்ட மரபணு மாற்றத்தால்தான் கோழி பிறந்ததாம். இதனால் கோழிதான் முதலில் வந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 99% பேருக்கு தெரியாத இந்த தகவலை SHARE பண்ணுங்க.