News February 17, 2025
சட்டம் ஒழுங்கு நிறைவாக உள்ளது: கருணாஸ்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிறைவாக உள்ளதாக கருணாஸ் கூறியுள்ளார். பாலியல் பிரச்னைகள் அதிகரிக்க செல்ஃபோன் பயன்பாடுதான் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், ஒரு இடத்தில் நடக்கும் சிறிய தவறுகள் சோஷியல் மீடியாவில் வைரலாகும்போது, அதே தவறு மீண்டும் நடப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும், திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் வரவேற்றுள்ளார்.
Similar News
News November 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 529 ▶குறள்: தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும். ▶பொருள்: உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்.
News November 24, 2025
சிந்து இந்தியாவுடன் இணையலாம்: ராஜ்நாத் சிங்

குறிப்பிட்ட சமூகத்தின் வாக்கை பெறுவதற்காக, அவர்களை திருப்திபடுத்தும் அரசு (காங்.,), சிந்துவில் இருந்து வந்த அந்நாட்டு (பாக்.,) சிறுபான்மையினரை (இந்துக்கள்) அவமானப்படுத்தியதாக ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டினார். இன்று சிந்து நிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இல்லாமல் இருக்கலாம் என்ற அவர், சிந்து மீண்டும் இந்தியாவுக்கு திரும்பலாம் என்றும் கூறினார்.
News November 24, 2025
துபாய் ஏர் ஷோ.. அமெரிக்க கேப்டன் அதிருப்தி

தேஜஸ் விமான விபத்தில் நமன்ஷ் சியாலுக்கு உயிரிழந்த பிறகும் துபாய் ஏர் ஷோ தொடர்ந்தது குறித்து அமெரிக்க F-16 குழுவின் கேப்டன் டெய்லர் ஹிஸ்டர் அதிருப்தி தெரிவித்துள்ளார். நமன்ஷுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தங்களது குழு இறுதி சாகசத்தை நிகழ்த்தாமல் வெளியேறியதாக அவர் பேசியுள்ளார். விபத்தை தொடர்ந்து, ஏர் ஷோ தொடரப்பட்டு அடுத்தடுத்த சாகசங்களை மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்ததாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.


