News September 5, 2024
நெல்லை – சென்னை ரயில் நேரம் மாற்றம்

ரயில் எண்: 06070 திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து இன்று(செப்.05) மாலை 18.45 மணிக்குப் புறப்படும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த ரயில் குறித்த நேரத்தில் புறப்பட இயலாமல் நாளை(செப்.06) நள்ளிரவு 2 மணி அளவில் (7 மணி 15 நிமிடங்கள் தாமதமாக) புறப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவித்துள்ளது.
Similar News
News August 7, 2025
நெல்லை: 10th PASSக்கு.. ரயில்வே வேலை! Apply…

நெல்லை மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் இங்கே <
News August 7, 2025
நெல்லையில் இன்று கைத்தறி தின கண்காட்சி

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள அறிக்கை: பதினோராவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாளை 7ம் தேதி சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது. நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கபட உள்ளது. நெசவாளர் கூட்டுறவு சங்க கைத்தறி ஜவுளிகள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்படுவதால் பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.
News August 6, 2025
நாரணம்மாள்புரம் பகுதியில் குவாரிக்கு தடையில்லா சான்று

தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், திருநெல்வேலியைச் சேர்ந்த முகமது சலீம் பாதுஷாவுக்கு நாரணம்மாள்புரம் பகுதியில் ஸ்டோன் மற்றும் கிராவல் குவாரி நடத்துவதற்கு சுற்றுச்சூழல் தடையில்லா சான்று வழங்கியுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://parivesh.nic.in இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஆணையம் தெரிவித்துள்ளது.