News April 5, 2025
மறைந்த நடிகர் ரவிக்குமார் உடல் தகனம்

பிரபல நடிகர் ‘அவர்கள்’ <<15989289>>ரவிக்குமார் (71) நேற்று காலமானார்<<>>. சென்னையில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திரையுலகை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதிச்சடங்குக்கு பின், இன்று மாலை வளசரவாக்கம் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. நடிகர்கள் நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் இறுதிவரை இருந்து அஞ்சலி செலுத்தினர். RIP
Similar News
News December 23, 2025
தமிழகத்தில் பொங்கல் பரிசு.. அறிவித்தார் அமைச்சர்

பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஜன.6-ம் தேதிக்குள் பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலைகள் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். ரொக்கத் தொகையுடன் பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கும் அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 23, 2025
ஸ்டார்பக்ஸ் தலைமை பொறுப்பில் தமிழர்

சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா என உலக அளவில் உள்ள பெருநிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்தியர்கள் அசத்தி வருகின்றனர். அந்தவரிசையில் இணைந்துள்ளார் இந்திய வம்சாவளியான ஆனந்த் வரதராஜன். ஸ்டார்பக்ஸ், தனது புதிய தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) ஆனந்தை நியமித்துள்ளது. சென்னை IIT பட்டதாரியான இவர், அமேசான் நிறுவனத்தில் 19 ஆண்டுகள் பணியாற்றியவர். வரும் ஜன.19-ம் தேதி அவர் தனது புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார்.
News December 23, 2025
பலமுறை கமிஷன் வாங்கி இருக்கேன்: மத்திய அமைச்சர்

பிஹாரில் MP, MLA-க்கள் அனைவரும் கமிஷன் வாங்குவதாக மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமிஷன் வாங்குவது ரகசியமில்லை எனக்கூறிய அவர், தானே பலமுறை கமிஷன் வாங்கி, அந்த பணத்தை கட்சி நிதிக்கும் அளித்துள்ளதாக தெரிவித்தார். தொகுதி மேம்பாட்டு நிதியில் குறைந்தபட்சம் 5% ஆவது கமிஷன் பெற அட்வைஸ் செய்தது, அவர் இடம்பெற்றுள்ள பாஜக கூட்டணியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


