News March 27, 2024

நாளை கடைசி: மத்திய அரசில் 4,187 பணியிடங்கள்

image

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 4,187 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 28) கடைசி நாளாகும். டெல்லி காவல் துறையில் 186 எஸ்ஐ பணியிடங்களும், மத்திய ஆயுதப்படையில் 4001 பணியிடங்களும் உள்ளன. இதற்கு பட்டப்படிப்பு முடித்த 20-25 வயதுடையவர்கள் <>https://ssc.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News December 7, 2025

ரோஹித், விராட் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்

image

தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான தொடரில் சதம் அடித்ததன் மூலம் புதிய சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். 3-வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வாலும் இணைந்துள்ளார். இந்த சாதனையை முதலில் படைத்த இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா. இதனை தொடர்ந்து ரோஹித், ராகுல், விராட், கில் ஆகியோர் இந்த பட்டியலில் இணைந்தனர்.

News December 7, 2025

79 ஆண்டுகளாகியும் நீடிக்கும் காலனித்துவ மனநிலை: PM

image

சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகளுக்கு பிறகும், நாம் காலனித்துவ மனப்பான்மையில் இருந்து விடுபடவில்லை என PM மோடி தெரிவித்துள்ளார். 2035-ல் நாம் 200 ஆண்டுகால காலனித்துவத்தை நிறைவு செய்கிறோம். எனவே அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் காலனி மனோபாவத்தை விடுவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மெக்காலே கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட 1835-ம் ஆண்டை தான் PM குறிப்பிடுகிறார்.

News December 7, 2025

ராசி பலன்கள் (07.12.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!