News June 15, 2024

இன்றே கடைசி: மொத்தம் 2,553 பணியிடங்கள்

image

தமிழக மருத்துவ துறையில் 2,553 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். கடந்த மே மாதமே விண்ணப்பிக்க அவகாசம் முடிந்த நிலையில், கூடுதலாக 2 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 01.07.2024 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க ஆர்வமுடையோர் <>https://mrb.tn.gov.in/<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News March 1, 2026

திமுக முன்னெடுக்கும் ஹாட் பாக்ஸ் அரசியல்

image

மாநாடு, பிறந்தநாள், பொதுக்கூட்டம் என்ற பெயரில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள்களை வழங்கும் முனைப்பில் தமிழக அரசியல் கட்சிகள் உள்ளன. இந்நிலையில், திண்டுக்கல் திமுக சார்பில், DCM பிறந்தநாளை முன்னிட்டு வீடு வீடாகச் சென்று ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, மதுரை திமுக மாநாட்டிலும் ஹாட் பாக்ஸுடன் பிரியாணி வழங்கப்பட்டது. திமுகவின் இந்த ஹாட் பாக்ஸ் அரசியல் பேசுபொருளாகியுள்ளது. உங்கள் கருத்து?

News March 1, 2026

ஓபிஎஸ்சுக்கு சபாநாயகர் பதவி வழங்க திட்டமிடும் திமுக

image

திமுகவில் இணைந்த OPS-க்கு முக்கியமான பொறுப்பு வழங்க ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. CM உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்த அவருக்கு, <<19251115>>திமுகவில் துணை பொதுச்செயலாளர்<<>> பதவி வழங்கப்படும் என அறிவாலய வட்டாரத்தில் ஏற்கெனவே பேச்சு அடிபட்டது. இந்நிலையில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், OPS-க்கு சபாநாயகர் பதவி வழங்கவும் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

News March 1, 2026

அரசியல் கட்சிகளின் முதல்படி எப்போது?

image

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக+, அதிமுக+, நாதக, தவெக என 4 முனைப்போட்டி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது களத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் எப்போது தொடங்கப்பட்டன என்பதை மேலே உள்ள போட்டோஸை swipe செய்து பாருங்கள். SHARE

error: Content is protected !!