News July 24, 2024

இன்றே கடைசி: மத்திய அரசில் 17,727 வேலை

image

மத்திய அரசுத்துறைகளில் 17,727 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (ஜூலை 24) கடைசி நாளாகும். இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டு நிலை தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர்கள் 18-30 வயதிற்குள் இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், <>https://ssc.gov.in/<<>> என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Similar News

News March 4, 2026

தனிக்கட்சி தொடங்கினார்.. இபிஎஸ் அதிர்ச்சி

image

‘புரட்சி அதிமுக’ என்ற புதிய கட்சியை பெங்களூரு புகழேந்தி தொடங்கியுள்ளார். புரட்சி என்பது MGR, ஜெயலலிதாவை குறிக்கும் என தெரிவித்த அவர், தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார். அதிமுக ஒன்றிணைப்பை முன்னெடுத்த இவர், OPS திமுகவில் இணைந்ததால் அதிமுகவுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனிக்கட்சி தொடங்கியது EPS-க்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

News March 4, 2026

ரேபிடோ ஓட்டுநர் பெயரில் ₹300 கோடி.. சிக்கிய ஹவாலா கும்பல்

image

அகமதாபாத்தில் கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் பங்கு சந்தை முதலீடுகள் சம்பந்தப்பட்ட ₹550 கோடி ஹவாலா மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாதம் ₹10,000 சம்பாதிக்கும் ரேபிடோ ஓட்டுநரான பிரதீப் பெயரில் ₹300 கோடி வரவு வைக்கப்பட்டது ED-க்கு சந்தேகத்தை எழுப்பியது. இதுதொடர்பான விசாரணையில், பிரதீப் தனது வங்கி கணக்கை ₹25,000-க்கு வாடகைக்கு விட்டது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

News March 4, 2026

பஹல்காம் தாக்குதல் வழக்கில் சீனாவிடம் உதவி கேட்கும் NIA

image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கில் NIA அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட GoPro Hero 12 Black ரக கேமராவை ஆய்வு செய்ததில், அது 2024 ஜன.30-ம் தேதி சீனாவின் டோங்குவான் பகுதியில் முதல்முதலாக பயன்படுத்தியதும், பின்னர் சீன விநியோகஸ்தர் மூலம் கேமரா கைமாறியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சர்வதேச சட்ட உதவி கோரி சீன அதிகாரிகளுக்கு NIA கடிதம் அனுப்பியுள்ளது.

error: Content is protected !!