News February 28, 2025
இன்றே கடைசி: 7 கோள்கள் ஒரே நேரத்தில்!

நூற்றாண்டுக்கு சில முறை மட்டுமே நிகழும் ஒரு வான் அதிசயத்தை இன்று காணலாம். புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 7 கோள்களும் ஒரே நேரத்தில் இன்று காட்சி தரும். 7 கோள்களும் சூரியனின் ஒரே பக்கத்தில் இருப்பதால் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இதில் யுரேனஸ், நெப்டியூனை காண மட்டும் தொலை நோக்கி தேவைப்படும். இந்த அரிய நிகழ்வு அடுத்து 2036ஆம் ஆண்டு நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News February 28, 2025
வெயிலில் கிச்சன் உஷ்ணம் இன்றி இருக்க.. சூப்பர் டிப்ஸ்!!

கோடை காலத்தில் கிச்சனில் சமைக்கும் போது, உடலின் உஷ்ணத்தை குறைக்க சூப்பர் டிப்ஸ்: வீட்டில் சமையலை ஒரு வேளையாக குறைக்கலாம் * சீக்கிரமாக தயாராகும் உணவுகளைத் தேர்ந்தெடுங்கள் *ஜன்னலை திறந்து வையுங்கள். Exhaust ஃபேனை பயன்படுத்துங்கள் *சிறிய பாத்திரங்கள் பயன்படுத்துங்கள். அவை, விரைவாக சூடாகி சமையல் வேகமாக முடியும் *உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள அடிக்கடி தண்ணீர், பழச்சாறுகளை பருகுங்கள்.
News February 28, 2025
வெதர்மேன் இல்லை; இனி வெதர்வுமன்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவராக முதல் முறையாக பெண் அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். 2016ல் இந்த பொறுப்புக்கு வந்த பாலச்சந்திரன் ஓய்வு பெறுவதால் அந்த பதவிக்கு அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1991ல் வானிலை ஆய்வு மையத்தில் பணிக்கு சேர்ந்த இவர், பருவமழையின் தரவுகளை ஆராய்ந்து பி.ஹெச்டி பட்டம் பெற்றிருக்கிறார்.
News February 28, 2025
காவல் ஆய்வாளருக்கு வாரண்ட்.. சீமான் வழக்கில் திடீர் திருப்பம்

சீமான் வீட்டில் நேற்று சம்மன் அளிக்க சென்றபோது ஏற்பட்ட மோதலில் இருவரை கைது செய்த காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷுக்கு வேறொரு வழக்கில் தாம்பரம் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 2019இல் வழக்கறிஞர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சீமான் மீதான பாலியல் வழக்கில் அவர் இன்று ஆஜராக உள்ள நிலையில், இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.