News September 21, 2025

இன்றே கடைசி: வங்கிகளில் 13,217 பணியிடங்கள்

image

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 18 – 40 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/ST, OBC பிரிவினருக்கு தளர்வு உண்டு. ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். <>இங்கே<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது மேலும் பல விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Similar News

News September 21, 2025

சுவாரஸ்யமான இந்தியா

image

இந்தியா என்பது பல அதிசயங்கள் கொண்ட நாடு. இந்தியாவைப் பற்றி அறிய பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. அதில், சிலவற்றை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. மேலும், உங்களுக்கு தெரிந்த சுவாரஸ்யமான விஷயத்தை கமெண்ட்ல சொல்லுங்க. நமது நாட்டின் பெருமையை ஷேர் பண்ணுங்க.

News September 21, 2025

மீண்டும் பொதுக்குழுவை கூட்டவுள்ளாரா ராமதாஸ்?

image

கடந்த மாதம் நடந்த பாமக பொதுக்குழுவில் அன்புமணியை நீக்கினார் ராமதாஸ். ஆனால் அதற்கு உறுப்பினர்களிடம் இருந்து ஒப்புதல் பெறப்படவில்லையாம். எனவே, மீண்டும் பொதுக்குழுவை கூட்டி, கட்சியிலிருந்து அன்புமணியை நீக்கியதற்கு ஒப்புதல் பெறும் தீர்மானத்தை நிறைவேற்ற ராமதாஸ் முடிவு செய்துள்ளார் என அவருடைய தரப்பினர் கூறிகின்றனர். இந்த பொதுக்குழு அக்டோபர் முதல் வாரத்தில் நடக்கலாம் என கூறப்படுகிறது.

News September 21, 2025

விலை குறைந்தது…

image

IRCTC சார்பில் ரயில்களிலும், ரயில்வே ஸ்டேஷன்களிலும் வாட்டர் பாட்டில் விற்கப்படுகிறது. GST வரி குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருவதை அடுத்து, ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் ₹15லிருந்து ₹14-ஆகவும், அரை லிட்டர் பாட்டில் ₹10லிருந்து ₹9-ஆகவும் IRCTC குறைத்துள்ளது. எனவே, இனி ரயில்களில் பயணிப்போர் கூடுதல் விலை கொடுத்து வாட்டர் பாட்டிலை வாங்க வேண்டாம்; ஒரு லிட்டர் வாட்டருக்கு ₹14 கொடுத்தாலே போதும்.

error: Content is protected !!