News April 3, 2025

இன்றே கடைசி: CISFஇல் 1,161 காலியிடங்கள்

image

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் (CISF) உள்ள 1,161 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். கான்ஸ்டபிள் நிலையிலான இந்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி, வயது வரம்பாக 18-23 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. OBC, EWS பிரிவினர் விண்ணப்பக்கட்டணமாக ₹100 செலுத்த வேண்டும். பெண்கள், SC/ST பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. <>இங்கே<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

Similar News

News August 23, 2025

ரஜினி வரலாற்றில் முதல்முறை… குவியும் ‘கூலி’ வசூல்

image

ரஜினி நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் ‘கூலி’ படத்தின் வசூல் ₹500 கோடியை நெருங்கிவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேகமாக இந்த சாதனையை படைத்த ரஜினி படம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், எந்திரன் பட இந்தி பதிப்பு வசூலை (₹23.84 கோடி) இந்த படம் எட்டே நாள்களில்(₹26.02 கோடி) முறியடித்துள்ளதாம். ரஜினி கரியரில் அதிகம் வசூலித்த ‘2.0’, ‘ஜெய்லர்’ ஆகிய படங்களின் வசூலை ‘கூலி’ முந்துமா?

News August 23, 2025

SPACE: பூமி சுழல்வதை நிறுத்தினால் என்ன ஆகும்?

image

பூமி சுழல்வதை நிறுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? ▶ஈர்ப்பு விசையின்றி மனிதர்கள் தூக்கி வீசப்படுவார்கள் ▶பூமியின் ஒரு முனையில் எப்போதும் வெயில், மற்றொரு முனையில் குளிர் நிலவும். இதனால் உயிரினங்கள் இறக்கும் ▶சூரியன் இன்றி தாவரங்கள் வளராது. உணவு தட்டுப்பாடு ஏற்படும் ▶சுனாமி, பூகம்பங்கள் உருவாகும் ▶மொத்தத்தில் உயிரினங்கள் வாழ தகுதியற்ற கோளாக பூமி மாறும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

News August 23, 2025

தவெக தொண்டர்கள் 3 பேர் மரணம்.. விஜய் இரங்கல்

image

மதுரை மாநாட்டிற்கு சென்றபோது உயிரிழந்த அக்கட்சியின் தொண்டர்கள் 3 பேரின் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில், ஊரப்பாக்கத்தை சேர்ந்த பிரபாகரன், நீலகிரியை சேர்ந்த ரித்திக் ரோஷன், விருதுநகரை சேர்ந்த காளிராஜ் ஆகியோரின் மறைவு மன வேதனை அளிப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும், அவர்கள் விரும்பிய இலட்சிய சமுதாயத்தை நாம் படைத்து காட்டுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!