News January 2, 2025
ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடைசி வாய்ப்பு!

போலி ரேஷன் கார்டுகளை கண்டறிய, ரேஷன் அட்டைதாரர்கள் சுய விவரங்களை (KYC) அப்டேட் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது, சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு, ஆதார் விவரங்களை கொடுக்க வேண்டும். இல்லையெனில், ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். இதற்கான காலக்கெடு டிச.31 உடன் முடிவடைந்த நிலையில், அவகாசத்தை இன்னும் சில நாட்களுக்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது. எனவே இதனை விரைந்து முடிப்பது நல்லது.
Similar News
News December 10, 2025
ராமநாதபுரம்: லஞ்சம் வாங்கிய VAO கைது!

பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒருவர் தனது பட்டா மாறுதலுக்காக வேந்தோனி கிராம VAO கருப்பசாமியை சந்தித்து பேசியுள்ளார். கருப்பசாமி தனக்கு ஆவனம் கிடைக்கவில்லை எனவும், தான் பரிந்துரை செய்வதற்காக ரூ.13,000 கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அந்த நபர் மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று ரசாயனம் தடவிய பணத்தை கருப்பசாமியிடம் கொடுக்கவே, அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
News December 10, 2025
அதிமுக உடன் கூட்டணி இல்லையா?

ADMK பொதுக்குழுவில் துரோகிகளால் ஆட்சியை இழந்ததாக OPS உள்ளிட்டோரை மறைமுகமாக குறிப்பிட்டு சி.வி.சண்முகம் பேசியதை கைதட்டி EPS வரவேற்றார். இதன் மூலம் இருவரையும் கூட்டணியில் இணைக்க அவர் விரும்பவில்லை என்பது தெரிகிறது. அதேநேரம் இருவரையும் கூட்டணியில் மீண்டும் இணைக்க, டெல்லியில் அண்ணாமலை முகாமிட்டுள்ளார். இதனால், இருவரும் கூட்டணியில் இணைவார்களா, இணையமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
News December 10, 2025
SIR படிவம் சமர்ப்பிக்க நாளையே கடைசி!

SIR படிவத்தை சமர்பிக்க நாளை, டிசம்பர் 11-ம் தேதியே கடைசி நாள். உடனே உங்கள் பகுதியின் BLO-வை அணுகி, படிவத்தை பூர்த்தி செய்து அவரிடம் சமர்ப்பியுங்கள். தமிழ்நாட்டில் இதுவரை 6.36 கோடி வாக்காளர்களின் பதிவுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. உங்கள் படிவம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதா என அறிய <


