News March 14, 2025
20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்: அமைச்சர் அறிவிப்பு

அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது கையடக்கக் கணினி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ₹2,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, லேப்டாப் (LAPTOP) அல்லது டேப் (TAB) பெற்று கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 4, 2025
PMK கொறடா பொறுப்பிலிருந்து நீக்க முடியாது: MLA அருள்

பாமக கொறடா பொறுப்பிலிருந்து MLA அருளை மாற்ற வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டபேரவை செயலரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் G.K.மணி அனுமதியில்லாமல் பாமக கொறடா பொறுப்பில் இருந்து தன்னை நீக்க முடியாது என்றும், கொறடாவாக எம்.எல்.ஏ. அருளே தொடருவார் என GK மணி அளித்திருக்கக்கூடிய கடிதத்தை சபாநாயகரிடம் தான் வழங்கயுள்ளதாகவும் MLA அருள் தெரிவித்தார்.
News July 4, 2025
FLASH: க்யூட் நுழைவுத் தேர்வு முடிவு வெளியானது

சென்ட்ரல் யுனிவர்சிட்டி மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் UG, PG படிப்புகளில் சேருவதற்கான க்யூட்(CUET) நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது. <
News July 4, 2025
விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு, தவெக நிர்வாகி தற்கொலை

விஜய்க்கு உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு புதுச்சேரி தவெக நிர்வாகி தற்கொலை செய்து கொண்டார். விபத்தில் சிக்கியதால் TVK நிர்வாகி விக்ரம், ₹3.80 லட்சத்துக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்துள்ளார். இதனால், பணம் கொடுத்த தனசேகரன், விக்ரம், மனைவி, குழந்தைகளை மோசமாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த விக்ரம், தவெக அடையாள உறுப்பினர் அட்டையுடன் கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.