News February 17, 2025

மீண்டும் மொழிப்போர்: வேல்முருகன் சூசகம்

image

தமிழகத்தில் மீண்டும் மொழிப்போரை உருவாக்கிட வேண்டாம் என மத்திய அரசுக்கு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மும்மொழிக் கொள்கை என்பது மோசடி, ஏமாற்று வேலை எனக் குறிப்பிட்ட அவர், தாய்மொழிக் கொள்கை தான் உலகின் தலைசிறந்த கொள்கை என்றார். மேலும், ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே உணவு என்பதை தமிழ்த் தேசியம் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 10, 2026

இரவில் அரிசி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

image

இரவில் வளர்சிதை மாற்றம் குறைவதால், அரிசி சாப்பிட்டால் கொழுப்பு திரட்டலின் காரணமாக உடல் எடை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. அறிவியலாக இதை அணுகுவோம். எடை அதிகரிப்பு என்பது உட்கொள்ளும் கலோரிகளுக்கும், எரிக்கப்படும் கலோரிகளுக்கும் உள்ள சமநிலையை பொறுத்து அமைவதாகும். இரவில் உடலின் செயல்பாடு குறையுமே தவிர, நிற்காது. அதனால், குறைவான கலோரிகளை எடுத்துக் கொள்ள அறிவியல் பூர்வமாக அறிவுறுத்தப்படுகிறது.

News March 10, 2026

விஜய்க்கு அழைப்பு விடுத்த பாஜக நிர்வாகி பதவி நீக்கம்

image

தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து A.N.S.பிரசாத் நீக்கப்பட்டுள்ளார். NDA-வில் இணையுமாறு விஜய்க்கு கூட்டணி அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவர் கட்சி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்ட ஊடகத்துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

News March 10, 2026

ராசி பலன்கள் (10.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!