News April 23, 2025
தரைவழி, வான்வழி.. அடுத்து ?

உரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம்
தரை வழியே பாக். ஆக்ரமிப்பு காஷ்மீரில் ஊடுருவி சென்று அதிரடித் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை வான்வழியாக சென்று தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு பகல்ஹாமில் தற்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்தியா எந்த வழியில் பதிலடி காெடுக்க போகிறது?
Similar News
News November 23, 2025
NATIONAL 360°: துப்பாக்கி வெடித்து காவலர் பலி

*ஹரியானாவில் 18 வயது பூர்த்தியாகாத நபர் ஓட்டிய கார் மோதியதில் 8 வயது சிறுவன் பலியான சோகம். *குஜராத்தில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, பள்ளி வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்த நபரை தேடி வரும் போலீசார். *ஜார்க்கண்டில் தனது துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் காவலர் பலி. *மகாராஷ்டிரா DCM அஜித் பவாரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 4 பேர் காயம்.
News November 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 527
▶குறள்:
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
▶பொருள்: அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்.
News November 23, 2025
டெல்லி காற்றுமாசு: 50% பேருக்கு WFH கொடுக்க அறிவுறுத்தல்

டெல்லியில் காற்றுமாசு நாளுக்கு நாள் மிக மோசமாகி வரும் நிலையில் முக்கிய முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது. அதன்படி தனியார் நிறுவனங்கள் 50% ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்த வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் மக்கள் குப்பைகள் எரிக்க கூடாது என தெரிவித்துள்ள சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங், அவ்வாறு செய்பவர்கள் குறித்து புகார் அளிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.


