News January 3, 2025
நிதீஷ்குமாருக்கு லாலு பிரசாத் அழைப்பு

INDIA கூட்டணியில் வந்து சேர்ந்துக் கொள்ளுமாறு பீகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு RJD தலைவர் லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 12 இடங்களும் நிதீஷின் JDU 12 இடங்களும் பெற்று மத்தியில் கூட்டணி ஆட்சியமைத்துள்ளன. இந்நிலையில், லாலுவின் அழைப்பு தொடர்பான கேள்விக்கு நிதீஷ்குமார் பதிலளிக்காமல் சென்றார்.
Similar News
News September 14, 2025
நாளையே கடைசி: உதவித்தொகையுடன் வேலை

திருச்சி BHEL நிறுவனத்தில் உள்ள 760 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பதவிக்கேற்ப ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு. வயது வரம்பு: 18 – 27. டிப்ளமோ முடித்தவர்களுக்கு ₹11,000, டிகிரி முடித்தவர்களுக்கு ₹12,000 என உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் ஆகும். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News September 14, 2025
BREAKING: அசாமில் நிலநடுக்கம்

அசாமில் சற்றுநேரத்திற்கு முன்பு (இன்று மாலை 4.41 மணிக்கு) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சோனிட்புர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். பாதிப்பு குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. கூடுதல் விவரங்களை அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.
News September 14, 2025
உப்பை குறைங்க 100 வயசு வரை வாழலாம்

ஜப்பானில் 100 வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. இதில் 88% பேர் பெண்கள். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதும், மீன், காய்கறிகள் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதும் அவர்களின் நீண்ட ஆயுளுக்கு முக்கிய காரணமாம். அதுமட்டுமல்ல, ஜப்பானியர்கள் உணவில் உப்பின் அளவை குறைவாக பயன்படுத்துவதும் மாரடைப்பு, புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து அவர்களை பாதுகாத்து ஆயுளை நீட்டிக்கிறதாம்.