News March 10, 2025
லலித் மோடியின் வனுவாட்டு பாஸ்போர்ட் கேன்சல்!

நிதி மோசடியில் சிக்கி வெளிநாடு தப்பிச்சென்ற IPL முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு வழங்கப்பட்ட வனுவாட்டு பாஸ்போர்ட்டை ரத்து செய்ய,
அந்நாட்டின் பிரதமர் ஜோதம் நபாட் உத்தரவிட்டுள்ளார். அவரது பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பரிசீலிக்கும்போது, எந்த குற்றப்பின்னணியும் தெரியவில்லை. ஒரு வேளை இன்டர்போல் அலர்ட் விடுத்திருந்தால், விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 10, 2025
அந்த சூப்பர் CM இவர் தான் : அண்ணாமலை

பதட்டத்தில் பிதற்றும் முதல்வரே, திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என மத்திய அமைச்சர் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்?. உங்கள் வாரிசு, தனியார் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சி உறுப்பினர்களா? என கேள்வி எழுப்பிய அவர், அந்த சூப்பர் CM ஸ்டாலின் தான் என்று விமர்சித்துள்ளார்.
News March 10, 2025
கார்த்தி படத்தின் புதிய அப்டேட்

கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. பூஜையுடன் தொடங்கிய டப்பிங் பணிகள் தொடர்பான புகைப்படங்களைத் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் பகிர்ந்துள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
News March 10, 2025
4 மாவட்டங்களுக்கு மிக கனமழை அலர்ட்

தமிழகத்தில் வரும் 11ஆம் தேதி நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக RMC கணித்துள்ளது. மேலும், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வரும் 12ஆம் தேதி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.