News March 17, 2024
அரையிறுதியில் லக்ஷயா சென் போராடி தோல்வி

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென் தோல்வியடைந்தார். பர்மிங்காமில் நேற்றிரவு நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இந்தோனேசியா வீரர் ஜோனாதன் கிறிஸ்டியை எதிர்கொண்ட சென், முதல் செட்டில் 12-21 என்ற கணக்கில் பின் தங்கினார். 2ஆவது செட்டை 21-10 என கைப்பற்றிய சென், வெற்றியைத் தீர்மானிக்கும் 3ஆவதுசெட்டில் 15-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
Similar News
News October 22, 2025
‘டியூட்’ பட சர்ச்சைகளுக்கு இயக்குநர் விளக்கம்

‘டியூட்’ படத்தின் கிளைமாக்ஸில் வரும் ஒரு வசனம், பிரதீப் ரங்கநாதன் சொல்லியதால் சேர்த்ததாக அப்படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் தெரிவித்துள்ளார். நெல்லை கவின் ஆணவ கொலைக்கு பின்னரே அந்த வசனம் சேர்க்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தாலி தொடர்பான சர்ச்சை காட்சிகளுக்கு விளக்கம் அளித்த அவர், தமிழ்நாட்டில் பெரியவர் (பெரியார்) சொன்ன வழியில் தான் பயணித்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
புதிய டிஜிபி நியமனம்: EPS-க்கு அமைச்சர் பதிலடி

புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக விமர்சித்த EPS-க்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அடாவடித்தனத்தாலே புதிய டிஜிபி நியமனத்தில் தாமதம் ஏற்படுவதாகவும், எத்தனையோ ஆண்டுகள் டிஜிபி இல்லாமல் அதிமுக ஆட்சி நடத்தியதை மறந்து EPS பேசுவதாகவும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, திமுக அரசுக்கு நெருக்கமானவர்களை டிஜிபியாக நியமிக்கவே தாமதப்படுத்துவதாக அவர் விமர்சித்து இருந்தார்.
News October 22, 2025
Deep Fake கண்டெண்ட்டுகளுக்கு செக்: IT விதிகளில் மாற்றம்

AI-ஆல் உருவாக்கப்படும் Deep Fake கண்டெண்ட்டுகள் குறித்த அபாயத்தை குறைக்க IT விதிகளில் மாற்றம் முன்மொழியப்பட்டுள்ளது. அதன்படி, 50 லட்சம் பயனாளர்களை கொண்ட சமூக வலைதளங்கள், பயனாளர்கள் பதிவேற்றுவது உண்மையானதா அல்லது AI-ஆல் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டெண்ட்டுகளில் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய மாற்றம் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.