News March 15, 2025
பெண்களே.. நாட்டுக்கோழி பண்ணை அமைக்கணுமா?

சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு வேளாண் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஏழைப்பெண்களுக்கு நாட்டுக்கோழி பண்ணைகளை அமைத்துக்கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிறு பால் பண்ணைகள் அமைக்க 4% மானியம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Similar News
News September 5, 2025
தமிழகம் முழுவதும் இன்று இந்த கடைகள் இயங்காது

மிலாடி நபி பண்டிகையையொட்டி இன்று(செப்.5) மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி, டாஸ்மாக் கடைகள், பார்கள் இன்று செயல்படாது. மீறி திறந்து விற்பனையில் ஈடுபட்டால், விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் இன்று மதுக்கடைகளுக்கு விடுமுறையாகும். SHARE IT.
News September 5, 2025
Health: புடவை கட்டுபவர்களை பாதிக்கும் கேன்சர்!

புடவை உடுத்தும்போது, In-Skirt-ஐ மிகவும் இறுக்கமாக கட்டுகிறீர்களா? உஷார். தொடர்ந்து In-Skirt-ஐ ஒரே இடத்தில் இறுக்கி கட்டுவதால் அங்கிருக்கும் தோல் புண்ணாகும். Frictional Dermatoses என அழைக்கப்படும் இந்த புண்ணை கவனிக்காமல் விட்டால் Skin Cancer ஏற்பட வாய்ப்பிருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, In-Skirt-ஐ கட்டும்போது இறுக்கி கட்டவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. SHARE.
News September 5, 2025
மகளிர் உலகக் கோப்பை டிக்கெட் ₹100 மட்டுமே!

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் செப்.30-ல் தொடங்குகிறது. இந்நிலையில், இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. இதுவரை இல்லாத வகையில், லீக் ஆட்டங்களுக்கு டிக்கெட் விலை ₹100 என மிக குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகளிர் கிரிக்கெட்டை காண வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே இவ்வாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீங்களும் டிக்கெட் புக் செய்ய இங்கே <