News September 25, 2025
லடாக் சம்பவம் ஒரு எடுத்துகாட்டு: உமர் அப்துல்லா

மாநில அந்தஸ்து மறுக்கப்பட்டதை ஜம்மு & காஷ்மீர் மக்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதற்கு லடாக் சம்பவம் ஒரு எடுத்துகாட்டு என உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியாகவும், அமைதியாகவும் தாங்கள் மாநில அந்தஸ்து கேட்டபோது, அதை மறுத்து மத்திய அரசு துரோகம் செய்ததாக அவர் கூறியுள்ளார். யூனியன் பிரதேச அந்தஸ்தை கொண்டாடிய லடாக் மக்கள் தான், தற்போது மாநில அந்தஸ்து வேண்டி போராடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 25, 2025
ATM-ல் உங்கள் பணம் சிக்கி கொண்டதா? இத பண்ணுங்க

➤அக்கவுண்டில் உள்ள பணம் குறைந்திருக்கிறதா பாருங்கள் ➤ATM இருக்கும் இடம், தேதி/நேரம், தொகை ஆகியவற்றை குறித்துவைத்து கொள்ளுங்கள் ➤வங்கிக்கு நேரடியாக செல்ல முடியவில்லை என்றால், மொபைல் APP-ல் “Failed ATM Transaction” என்ற வசதியின் மூலம் புகாரளியுங்கள் ➤5 நாள்களில் உங்கள் பணம் உங்களிடம் வந்துசேரும். தாமதமாகும் பட்சத்தில், வங்கி உங்களுக்கு நாளொன்றுக்கு ₹100 இழப்பீடு வழங்கவேண்டும். SHARE.
News September 25, 2025
BREAKING: அதிமுக புதிய கூட்டணியா? பரபரப்பு

TTV, OPS விவகாரத்தில் பாஜக, அதிமுக இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது இருக்கும் கூட்டணி பிரியலாம், புதிய கூட்டணி அமையலாம் எனக் கூறி EX மினிஸ்டர் கடம்பூர் ராஜு அடுத்த பரபரப்பை கிளப்பியுள்ளார். கூட்டணி அமைக்க இன்னும் கால அவகாசம் இருப்பதால் புதிய கூட்டணிகள் அமைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். நேற்று EPS-ம் கூட்டணியை நம்பி அதிமுக இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News September 25, 2025
குரோமுக்கு போட்டியாக வந்தது புது Browser

கூகுள் குரோமுக்கு போட்டியாக Comet எனும் Browser-ஐ Perplexity AI அறிமுகப்படுத்தியுள்ளது. மேம்படுத்தப்பட்ட AI அசிஸ்டண்ட், கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கு Writing Assistance, ரியல் டைம் உண்மை சரிபார்ப்பு என அடுத்த தலைமுறை Browsing டூல்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. Windows, MacOS-ல் Perplexity Pro பயன்படுத்துபவர்களுக்கு Comet கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு பயனாளர்கள் ஆர்டர் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.