News June 15, 2024
சிலிண்டர் விநியோக ரசீதில் KYC நிலுவை என முத்திரை

சிலிண்டர் பயனாளர்களின் உண்மை நிலையை அறிய, கை விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், பயனாளர்கள் பலர் இன்னும் KYC அப்டேட் செய்யவில்லை என கேஸ் ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன. மேலும், சிலிண்டர் விநியோகம் செய்யும்போது வழங்கப்படும் ரசீதில், KYC நிலுவையில் உள்ளது என்ற முத்திரையை ஏஜென்சிகள் பதிவு செய்து அனுப்புகின்றன. நீங்கள் KYC அப்டேட் செய்துவிட்டீர்களா?
Similar News
News March 1, 2026
திமுக -காங் இருவரும் ஊழல்வாதிகள்: PM மோடி

முந்தைய காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர் என PM மோடி பேசியுள்ளார். புதுச்சேரியில் பேசிய அவர், புதுச்சேரியை டெல்லியில் உள்ள ஒரு குடும்பத்துக்கான ஏடிஎம் போலவே காங்., கருதியதாக கூறியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் திமுகவும் காங்கிரஸும் பல ஊழல்களையும், குற்றச் சம்பவங்களையும் செய்ததாகவும், அவர்கள் புதுச்சேரியில் ஆட்சியமைக்க வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 1, 2026
தங்கம், வெள்ளி விலை.. தலைகீழாக மாறியது

ஈரான் – US போர் பதற்றம் தொடரும் நிலையில், விடுமுறை நாளான இன்றும் வரலாறு காணாத வகையில் தங்கத்தை போல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹5 உயர்ந்து ₹325-க்கும், 1 கிலோ வெள்ளி ₹3.25 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. 2 நாள்களில் மட்டும் கிலோவுக்கு ₹10,000 உயர்ந்து வெள்ளி விலை ஷாக் கொடுத்துள்ளது. வரும் நாள்களிலும் தங்கம், வெள்ளி விலை உயரும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.
News March 1, 2026
148 மாணவிகள் கொல்லப்பட்டனர்.. PHOTOS

இஸ்ரேல் – அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரானின் <<19264222>>பெண் குழந்தைகள் தொடக்கப்பள்ளி ஒன்று வெடித்து சிதறியது<<>>. இந்நிலையில், கல் நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும் இச்சம்பவத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 148-ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என ஈரான் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அப்பாவி சிறுமிகளை கொன்றதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.


