News August 26, 2024
‘குட்டி கிருஷ்ணா’.. வைரலாகும் விஜய்யின் புகைப்படம்!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பலரும் தங்கள் வீட்டு குழந்தைகள் ‘கிருஷ்ணர்’ வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். பிரபலங்களும் தங்கள் வீட்டு குட்டி கிருஷ்ணாவின் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் சிறு வயதில் கிருஷ்ணர் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் விஜய் எப்படி உள்ளார் என கமெண்ட் பண்ணுங்கள்
Similar News
News March 3, 2026
தவெக பக்கம் சாய்கிறதா காங்கிரஸ்?

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு 2 நாள்களே உள்ள நிலையில், <<19272775>>திமுக-காங்., தொகுதிப்<<>> பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இதில் திமுக கூட்டணி 4 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளதால், ராஜ்ய சபா சீட் வேண்டுமா அல்லது வேண்டாமா என இன்று மாலைக்குள் முடிவெடுக்க காங்கிரஸுக்கு திமுக கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பிறகும் <<19281967>>தவெகவுடன் காங்.,<<>> பேச்சுவார்த்தை நடத்துவதால் ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.
News March 3, 2026
S-400 சுதர்சன் சக்ரா.. இந்தியாவின் மாஸ்டர் பிளான்

ரஷ்யாவிடம் இருந்து மேலும் 5 சுதர்சன சக்ரா வான் பாதுகாப்பு கவச வாகனங்களை (S-400) வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கு பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும், கூடுதலாக சில ஏவுகணைகளையும் வாங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவை ஆப்ரேஷன் சிந்தூரின் போது திறம்பட செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, ஒப்பந்தத்தின்படி ரஷ்யா இன்னும் இரண்டு S-400 வாகனங்களை வழங்க வேண்டும்.
News March 3, 2026
போரின் கோரமுகம் (PHOTOS)

USA, இஸ்ரேல் – ஈரான் போரால் கடந்த 4 நாள்களிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். குண்டு நம் விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் பிள்ளைகளுடன் பெற்றோர் தவிக்கும் போட்டோக்கள் நெஞ்சை உலுக்குகின்றன. என்ன நடக்கிறது என்று புரியாமல் குழந்தைகள் தங்களது பெற்றோரின் மீது சாய்ந்து விடிவை தேடி காத்திருக்கின்றனர். போரினால் அப்பாவி மக்கள் அல்லாடும் போட்டோக்களை பகிர்ந்துள்ளோம். SWIPE செய்து பாருங்கள்.


