News June 26, 2024
காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினர் குஷ்பு ஆய்வு நடத்தி வருகிறார். தமிழகத்தையே உலுக்கிய கருணாபுரம் விஷச்சாராய உயிரிழப்புகள் குறித்த விவரங்களை அவர் கேட்டறிந்து வருகிறார். விஷச்சாராயம் குடித்தவர்களில், இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News November 19, 2025
ஆண்களே, இது உங்களுக்கு தான்!

பெண்களுக்கு ‘Women’s day’ இருக்கும்போது, ஆண்களுக்கு Men’s day இருக்கக் கூடாதா? ஆம், இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்கள் மற்றும் பதின்வயது பையன்கள் சந்திக்கும் சவால்கள், பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் செய்திகளை எடுத்துச் சொல்வதை இந்த ஆண்டின் கருத்துருவாக அறிவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இன்று யாரேனும் ஆண்கள் தின வாழ்த்துச் சொன்னார்களா?
News November 19, 2025
ATM-ல் கிழிந்த நோட்டு வந்து விட்டதா? இதை பண்ணுங்க

ATM-ல் இருந்து பணம் எடுக்கும்போது சில சமயங்களில் கிழிந்த, சேதமடைந்த நோட்டுகள் வரும். இதனை சம்பந்தப்பட்ட வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம். இதற்கு முழு பொறுப்பும் வங்கி என்பதால், நல்ல நோட்டை பெற்றுக் கொள்ளலாம். இதற்கென தனிக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. உங்களிடம் உள்ள ATM receipt இருந்தால், அதனை கொடுக்கலாம். அல்லது, வங்கியிலேயே உங்கள் ATM பரிவர்த்தனைக்கான statement இருக்கும். ஷேர் பண்ணுங்க.
News November 19, 2025
இந்த கேம்ஸ் விளையாடி இருக்கீங்களா?

வேடிக்கையான பல டிஜிட்டல் கேம்ஸ் திறன்களை வளர்த்துக்கொள்ள பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக சில கேம்ஸ், உத்தி, தொலைநோக்கு பார்வை, நினைவாற்றல், கவனம், வேகம், வாசிப்பு, எழுத்து, கணிதத் திறன், சொல்லறிவு, படைப்பாற்றல் ஆகியவற்றை மேம்படுத்துகின்றன. அவை என்னென்ன கேம்ஸ் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE


