News March 29, 2025
குணால் கம்ராவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த விவகாரத்தில் ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா மீது 3 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவின் ஜல்கான் மேயர், ஹோட்டல் உரிமையாளர் மற்றும் தொழிலதிபர் ஒருவர் என மூவர் கர் காவல்நிலையத்தில் அளித்த புகார்களின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குணால் கம்ராவுக்கு வரும் 7ஆம் தேதி வரை சென்னை ஐகோர்ட் முன் ஜாமின் வழங்கியுள்ளது.
Similar News
News April 1, 2025
மாதம் ரூ.5000… அப்ளை பண்ணுங்க

PM இன்டர்ன்ஷிப் திட்டத்தில் இணைவதற்கான காலக்கெடுவை, மத்திய அரசு ஏப்.15 வரை நீட்டித்துள்ளது. 12th, Diploma, ITI, Degree படித்த, வேலையில்லாத 21-24 வயதினர் இதில் இணையலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இதன் மூலம் டாப்-500 நிறுவனங்களில் மாதம் ₹5,000 உதவித் தொகையுடன், ஓராண்டு internship பெறலாம். மேலும், ஒருமுறை ₹6,000 கிடைக்கும். இணைய: https://pminternshipscheme.com/
News April 1, 2025
ரூ.2,000 நோட்டுகள் 98.21% திரும்பிவிட்டன: ரிசர்வ் வங்கி

ரூ.2,000 நோட்டுகள் 98.21% திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது. 2023 மே மாதம் ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக RBI அறிவித்தது. இதையடுத்து ரூ.2,000 நோட்டுகளை திருப்பி அளிக்க 2023 அக்.7 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், RBI அறிவிப்பில், ரூ.6,366 கோடி மதிப்பு ரூ.2,000 நோட்டுகள் தவிர்த்து அனைத்து நோட்டுகளும் திரும்பி விட்டதாக கூறப்பட்டுள்ளது.
News April 1, 2025
2 ரன்னில் பன்ட் அவுட்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ஐபிஎல்லில் பன்ட்டை ரூ.27 கோடிக்கு லக்னோ ஜெயன்ட்ஸ் அணி வாங்கியிருந்தது. ஆனால், டெல்லிக்கு எதிராக ரன் எடுக்காமல் டக் அவுட்டும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக 15 ரன்களிலும் அவுட் ஆகியிருந்தார். அதேபோல், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 2 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து, ரூ.27 கோடி வீண் என்று சமூகவலைதளத்தில் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.