News September 4, 2025
மலையாள சினிமாவில் கும்பமேளா மோனலிசா

ஒரே நைட்டில் ஃபேமஸானவர்கள் பட்டியலில் எப்போதும் கும்பமேளா மோனலிசா போஸ்லேவுக்கு தனியிடம் உண்டு. இவர் பாலிவுட்டிலும் படம் நடித்து வருகிறார். இதனிடையே, சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கேரளாவும் வந்தார். இந்நிலையில், மலையாள சினிமா அவரை வரவேற்றுள்ளது. இதன்படி, நடிகர் கைலாஷ் உடன் இணைந்து ‘நாகம்மா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பூஜை வீடியோ தற்போது வைரலாகிறது.
Similar News
News September 4, 2025
முதுகு வலியை விரட்டும் ‘பத்ராசனம்’ (மலை போஸ்)

☆கை, கால் தசைகள் வலுவடையும். தண்டுவட பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லும்.
➥முதுகு நேராக இருக்கும்படி, நன்கு கால்களை விரித்து நிற்கவும்.
➥முன்னோக்கி உடலை வளைத்து, கைகள் முடிந்தவரை தரையில் பட, கால்களும், முதுகும் நேராகவே இருக்க வேண்டும்.
➥முடிந்தவரை உடலை வளைத்து தரையை தொட முயற்சிக்கவும். ➥இந்தநிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
News September 4, 2025
கவர்ச்சியை ரசிப்பதில் தவறில்லை: ரகுல் ப்ரீத் சிங்

திருமணத்துக்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை என ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். சொல்லப்போனால், திருமணத்துக்கு பிறகுதான் தனது அழகும் கவர்ச்சியும் அதிகரித்திருப்பதாக பேட்டியில் பேசிய அவர், திருமணம் என்பது நடிகைகளின் வளர்ச்சிக்கோ முன்னேற்றத்துக்கோ தடை போடாது என்றார். அத்துடன் கவர்ச்சியை ரசிப்பதில் தவறில்லை என்ற அவர், வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
News September 4, 2025
விலகிய உடனே விஜய்க்கு ஆதரவு: புதிய கூட்டணியா?

NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த TTV தினகரன், விஜயகாந்த் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தினாரோ, அதேபோல் 2026-ல் விஜய்யின் தவெகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். இது தவெக கூட்டணிக்கு, TTV செல்லவுள்ளதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே OPS-ம் விலகிய நிலையில், செங்கோட்டையனின் நிலைப்பாட்டை பொறுத்தும் கூட்டணி கணக்கு மாறும் என்கிறது அரசியல் வட்டாரம்.